0 Comments
Published on: Saturday, August 22nd, 2020 at 11:08 AM
மண்டை சளியை வெளியேற்ற வெறும் 13 மிளகுதான்… இதை செய்து பாருங்கள்..!
பலருக்கு தலையில் நீர் கோர்த்து, சளியாக மாறி பெரும் இன்னலுக்கு ஆளாவார்கள். அவர்களுக்கு எளிமையான முறையில் சிகிச்சை அளிக்க வெறும் 13 மிளகு போதும்.
முதலில் சளி எதனால் ஏற்படுகிறது என பார்த்தால், குறிப்பிட்ட வைரசால் தலையில் நீர் கோர்த்து விடுகிறது. இதனால், தலையில் இருக்கும் நீரை மூக்கின் வழியே வெளியேற்ற ஜலதோசம் உதவுகிறது. தொடர்ந்து சளி பிடித்து தும்மல் வருவதாலும், மூக்கில் இருக்கும் நீரை பலமுறை வெளியே சிந்துவதாலும் மூக்கில் வலியும், தொண்டையில் கரகரப்பும் அதிகமாகிறது.
ஜலதோசம் வருவதற்கு முன்பே நமது தொண்டையில் வலி சற்று அதிகமாவதோடு, கரகரப்பு மற்றும் எரிச்சலும் ஏற்படும். இதிலிருந்தே நமக்கு ஜலதோசம் வரும். இந்த நேரத்தில் நாம் 13 மிளகு எண்ணி எடுத்து, மென்று சாப்பிட வேண்டும். தூசு, குப்பையினால் ஏற்படும் அலர்ஜி போன்றவற்றினால் ஏற்படும் ஜலதோசமும் இந்த மிளகு சிகிச்சையால் சரியாகும்.
தலையில் நீர் சேர்ந்திருப்பதால் ஏற்படும் ஜலதோசம் மிளகு சாப்பிட்டால் கட்டுக்குள் வரும். ஆனாலும், முழுமையான குணம் கிடைக்காது. எனவே தலையில் சேர்ந்திருக்கும் நீரை எடுப்பதற்கான மருந்தை சற்று விரிவாகப் பார்ப்போம்.
அகத்தியர் தன் நூலில் அக்கினி சேகரத்தையும் வெள்ளையையும் சேர்த்தால் ரத்தம் வரும். இதை பூசினால் உடனடியாக குணம் கிடைக்கும் என தெரியப்படுத்தியுள்ளார். அகத்தியர் கூறிய அக்கினி சேகரம் என்பது மஞ்சள் தூள். வெள்ளை என்பது சுண்ணாம்பு.
இரண்டு சிறிய ஸ்பூன் அளவு மஞ்சள் தூள், கால் ஸ்பூன் அளவுக்கு சுண்ணாம்பு எடுத்து சிறிது தண்ணீர் விட்டு பூசுவதற்கு தகுந்தாற்போல் கலந்து, தலையைச் சுற்றி நெற்றிலும், மூக்கின் மேல் பகுதியிலும் இதை பூச வேண்டும். இவ்வாறு பூசினால், தலையில் சேர்ந்திருக்கும் அனைத்து நீரையும் சுண்ணாம்பு எடுத்து விடும்.
இதை செய்த பிறகு, உங்களுக்கு சளி பிடித்ததற்கான எந்த அறிகுறியும் இல்லாமல், மிகவும் மகிழ்ச்சியாக உணர்வீர்கள். செய்து பாருங்கள்..!
No comments yet