0 Comments
Published on: Tuesday, August 11th, 2020 at 10:49 AM
வீட்டில் எலி, பல்லி, கரப்பான் பூச்சி, ஈ, கொசு தொல்லையா? கூண்டோடு ஒழிக்க இதை செய்தால் போதும்..!
சிலரது வீடுகளில் கரப்பான் பூச்சி, பல்லி, எலி என்ற ஜந்துகளின் தொந்தரவால் வேதனையை அனுபவிப்பார்கள். அவற்றை சாதாரணமாகவே வீடுகளில் இருந்து விரட்டியடிக்க முடியும்.
கரப்பான் பூச்சி தொல்லையை போக்க பிரியாணி இலையை (ரம்பை இலை) பொடி செய்து கரப்பான் பூச்சி உங்கள் வீட்டில் அடிக்கடி வரும் இடங்களில் போட்டால், அந்த வாசனையில் கரப்பான் பூச்சி வராது. அதேபோல், கரப்பான் பூச்சி வரும் இடங்களில் கிராம்பை வைத்தாலும் அந்த பக்கமே தலைகாட்டாது.
மிளகுத்தூள், வெங்காய பேஸ்ட், பூண்டு பேஸ்ட் ஆகியவற்றை கொஞ்சம் தண்ணீரில் கலந்து தெளித்தாலும் கரப்பான் பூச்சி தொல்லை இருக்காது. அதேபோல், எலி பிரச்சனையை போக்க புதினாவை கசக்கிப் போட்டால் போதும். இதேபோல், எண்ணெய்யை பஞ்சில் நனைத்து எலி வரும் இடத்தில் வைத்தால், அங்கு வரவே வராது.
பல்லி, ஈ, கொசுக்களை விரட்ட வீட்டு மூலைகளில் முட்டை ஓடுகளை வைத்தால், அந்த நாற்றத்தால் பல்லி வராது. இதேபோல், ஜன்னல்களில் துளசி செடியை வைத்தால் ஈ வராது. ஈக்களுக்கு துளசி வாசம் பிடிக்காது என்பதால், தொல்லை இருக்கவே இருக்காது.
இதேபோல், காய்ந்த வேப்பிலையை வைத்து தீ மூட்டினால், அந்த புகை மூட்டத்தில் கொசுக்கள் செத்துவிடும். இதேபோல், மெத்தையில் வெங்காயச் சாறு வெங்காயச் சாறு தெளித்தால், மூட்டை பூச்சி செத்துப் போகும்.
No comments yet