Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

உடலில் கொலஸ்ட்ராலை குறைக்க எளிய வழி… இந்த இரண்டே போதும்…!

0 Comments

Published on: Wednesday, August 19th, 2020 at 10:27 PM

உடலில் கொலஸ்ட்ராலை குறைக்க எளிய வழி… இந்த இரண்டே போதும்…!

கொலஸ்ட்ரால் பிரச்சனை அதிக எடையையும், இளம் வயதிலேயே மாரடைப்பு போன்றவற்றையும் ஏற்படுத்தி விடுகிறது. எனவே உடலில் உள்ள கொழுப்பை எளிமையான முறையில் எப்படி கரைப்பது என தெரிந்து கொள்ளலாம்.

தற்போது உணவகங்களில் விற்கப்படும் எந்த உணவை எடுத்தாலும், அதில் கொழுப்புச் சத்து அதிகமாகத்தான் இருக்கிறது. அந்த கொழுப்பை எரிப்பதற்கு சரியான உடற்பயிற்சிகளை யாராலும் தொடர்ந்து செய்ய முடியவில்லை. இதனால் 30 வயதிலேயே இதய நோய்களை சந்திக்க வேண்டியுள்ளது. இவ்வாறு உள்ளவர்களுக்காகவே ஒரு அற்புதமான நாட்டு மருந்துகளை நம் முன்னோர்கள் தந்துள்ளனர்.

இவற்றை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் ஒரே மாதத்தில் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து விடலாம். உடலும் இளமையாகவும், ஆரோக்கியமாகவும், அழகாகவும் மாறிவிடும்.

தேவையான பொருட்கள்

பேரீச்சம்பழம்  – 4

இஞ்சிச் சாறு   – 2 ஸ்பூன்

இந்த இரண்டு பொருட்களையும் சிறிது நீர் விட்டு மிக்சியில் அரைத்துக் கொள்ள வேண்டும். இதை நாள்தோறும் இரவு சாப்பாடு முடித்தவுடன், மருந்து போல சாப்பிட வேண்டும். இதனால் ஒரே மாதத்தில் உடலில் தங்கியுள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைவதை கண்கூடாக காணலாம்.

பேரீச்சம்பழத்தில் உள்ள நார்ச்சத்து உடலில் உள்ள ரத்த குழாய்களில் தேங்கும் அடைப்பை நீக்கிவிடும் தன்மையுடையது. இஞ்சியில் உள்ள குறிப்பிட்ட அமிலம் உடலில் உள்ள தேவைய்ற்ற கொழுப்புகளை கரைத்து, உடலில் இருந்து வெளியேற்றும் சக்தி வாய்ந்தது. இந்த மருந்தை உட்கொள்ளும் ஒரு மாதத்தில் மட்டும் எண்ணெய்யில் பொரித்த உணவுகளை கூடுமானவரை தவிர்த்துவிடுங்கள்.

பார்லி

பார்லியில் உள்ள அதிக அளவு நார்ச்சத்துகள் உடலில் உள்ள நாள்பட்ட கொழுப்பை கரைக்கக் கூடிய ஆற்றல் பெற்றது. இதன்மூலம் கொலஸ்ட்ரால் அதிகரிப்பது தடைபடும். மேலும் மீண்டும் கொழுப்புகள் உடலில் சேராது.

கத்திரிக்காய்

கலோரிகள் எதுவுமே இல்லாத உணவு கத்திரிக்காய். இதை உண்பதால் உடலில் கொழுப்புகள் சேர்வதை தவிர்க்க முடியும். அத்துடன் விளையும் குறைவான ஆரோக்கியமான உணவு.

மீன்

மீன்களில் உள்ள நல்ல கொலஸ்ட்ரால் கெட்ட கொலஸ்ட்ரால் உடலில் சேருவதை தடுக்கும். ஆகவே பல்வேறு மீன் வகைகளை அடிக்கடி உணவில் சேர்த்து வரலாம்.

ஆப்பிள்

நாள்தோறும் ஆப்பிள் சாப்பிடுவதன்மூலம் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரையத் தொடங்கும். ஆப்பிளில் உள்ள வைட்டமின் சி மற்றும் பெக்டின் இதற்கு உதவி செய்கிறது.

கொட்டைகள்

நொறுக்குத் தீனி சாப்பிடும் பழக்கம் உள்ளவர்கள், அதற்கு பதிலாக நாள்தோறும் முந்திரி, பாதாம், பிஸ்தா போன்ற நட்ஸ் வகைகளை சாப்பிட்டு வந்தால், உடலுக்கு ஆரோக்கியம் மட்டுமல்லாமல், கெட்ட கொழுப்புகள் உடலில் தங்காது.

வெங்காயம்

வெங்காயத்தில் உள்ள ஒருவகை பிளேவனாய்டுகள் ரத்தத்தில் அதிகப்படியாக தங்கியிருக்கும் கொழுப்புகளை கரைக்கிறது. எனவே, உணவில் அடிக்கடி வெங்காய்த்தை சேர்த்துக் கொண்டால், இதயத்திற்கு பலம் கிடைக்கும்.

பசலைக் கீரை

பசலைக் கீரைகளில் உள்ள லுடீன் எனப்படும் சத்து உடலில் உள்ள தமனிகளில் ஏற்பட்டிருக்கும் கொழுப்புகளை கரைக்கக் கூடியது. ஆகவே, உணவில் அடிக்கடி பசலைக் கீரையை சேர்த்து வந்தால், கொலஸ்ட்ராலை கட்டுப்பாட்டில் வைக்க முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet