0 Comments
Published on: Saturday, August 15th, 2020 at 9:39 AM
வாய்ப்புண் வரக் காரணம் என்ன? மூட்டு வலி பிரச்சனைக்கு தீர்வு… எளிய முறைகள்…
வாய்ப்புண், செரிமானப் பிரச்சனை, மூட்டுவலி ஆகியவை பலருக்கும் தொந்தரவு கொடுக்கும். ஆனால், அதை மிகவும் எளிமையான முறையில் சரிகட்டி, ஆரோக்கியம் பெற முடியும். அதை செய்வது எப்படி என தெரிந்து கொள்ளுங்கள்…
கட்டிகள், வாய்ப்புண் குணமாக…
நறுமணம் வீசும் திருநீற்றுப் பச்சிலை செடியின் இலைகளை அரைத்து கட்டிகளின் மீது பூசினால் உடனே கட்டிகள் கரையும். இதன் இலைகளை வெறுமனே முகர்ந்தாலோ அல்லது நீரில் போட்டு கொதிக்கவைத்து ஆவி பிடித்தாலோ தலைவலி, ரத்தஅழுத்தம், அதீத இதயத்துடிப்பு, தூக்கமின்மை ஆகிய பிரச்சனைகள் சரியாகும். திருநீற்றுப் பச்சிலை இலையை மென்று சாப்பிட்டால் வாய்ப்புண் குணமாகும்.
கொத்தமல்லி
கொத்தமல்லி தழைகளை சமையலில் சேர்ப்பது வாசனைக்காக மட்டும் அல்ல, ஆரோக்கியத்திற்கும் உதவும் என்பதால் தான், உப்புக்கள் சேர்ந்த உருவாகும் கல்லை ஆரம்ப நிலையிலேயே கரைக்க கொடியது இது. இதை உணவுடன் உண்பதால் உடலில் சேரும் தேவையற்ற கொழுப்புகளை கரைத்து, வயிற்று கோளாறு, செரிமானப் பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது.
வேர்க்கடலை
நார்ச்சத்து அதிமுள்ளதால் உடல்பருமனை குறைக்க சிறந்தது. சரும ஆரோக்கியத்துக்கு சிறந்தது. உடலில் கொழுப்பின் அளவை பராமரிக்க உதவுகிறது. வைட்டமின் ஈ இருப்பதால் இதயத்திற்கு நல்லது. தொடர்ந்து சாப்பிட்டால் மன அழுத்தம், பதற்றம் ஆகியவற்றைக் குறைக்கும். பித்தப்பை கற்களைத் தடுக்க உதவும்.
நரம்பு தளர்ச்சி, மூட்டு வலிக்கு…
மழைக்காலத்தில் செழித்து வளரும் முடக்கத்தான் கீரையை அரைத்து தோசை மாவுடன் கலந்து தோசை செய்து சாப்பிடலாம். முடக்கத்தான் இலையை நீர் விட்டு, கொதிக்க வைத்து உப்பு, மிளகுத்தூள் சேர்த்து சூப் செய்தும் குடிக்கலாம். இதனால் நரம்பு தளர்ச்சி உள்ளிட்ட நரம்பு சார்ந்த நோய்கள் அனைத்தும் குணமாகும், மூட்டு வலி, முடக்கு வாதம் ஆகியவை உடலை விட்டு அகலும்.
உடல் சுறுசுறுப்பு, மூளை நரம்புகள் ஆரோக்கியத்திற்கு…
பிரண்டையை சிறு துண்டுகளாக நறுக்கி, நல்லெண்ணெய் அல்லது நெய்யில் வதக்கி உப்பு, புளி, காரம் சேர்த்து துவையலாக அரைத்து சாப்பிடலாம். இதனை சாப்பிட்டால் உடல் சுறுசுறுப்பாகும். மூளை நரம்புகள் பலப்படும். குடலில் உள்ள வாயுவை அகற்றி வெளியேற்றும். குழந்தைகளுக்கு பிரண்டையை சாப்பிட கொடுத்து வந்தால் எலும்புகள் பலப்படும்.
No comments yet