Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

அயர்ன் பாக்ஸ் அடிப்பிடித்து விட்டதா? இதை செய்தால் நொடியில் கிளீன் ஆகிவிடும்..!

0 Comments

Published on: Monday, August 31st, 2020 at 7:40 PM

அயர்ன் பாக்ஸ் அடிப்பிடித்து விட்டதா? இதை செய்தால் நொடியில் கிளீன் ஆகிவிடும்..!

தோசைக் கல்லில் தோசையை ஊற்றிவிட்டு சில நிமிடங்கள் கவனிக்காமல் விட்டுவிட்டால் என்னவாகி இருக்கும். தோசை கரிந்து போய் இருக்கும். அந்த தோசையை தூக்கி வீசி விடலாம். தோசைக் கல்லில் ஒட்டி இருக்கும் கரிந்த பகுதிகளை தோசைக் கரண்டியை வைத்து அப்புறப்படுத்தி விடுவோம். இதேபோல் அயர்ன் பாக்ஸை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்.

கவனிக்காமல் ஓரிரு நிமிடங்கள் இருந்தால் துணி கரிந்து விடும். அப்போது துணியை தூக்கி வீசி விட்டு, அயர்ன் பாக்ஸை திருப்பிப் பார்த்தால், அதில் கருப்பு நிறம் படிந்தே இருக்கும். காலப் போக்கில் அது இன்னும் அசிங்கமாகத் தெரியும். அதற்கு அதை சோப்பு போட்டு கழுவ முடியுமா? நிச்சயம் முடியாது. தண்ணீர் உள்ளே இறங்கினால், அயர்ன் பாக்ஸ் வேலையே செய்யாமல் போய் விடும். தண்ணீர் உள்ளே இருந்து ஷாக் அடிக்கவும் வாய்ப்பு உள்ளது. பின்பு எப்படி சுத்தம் செய்வது?

அயர்ன்பாக்ஸின் அடிப்பகுதி, அதாவது நாம் துணியை தேய்க்கும் பகுதியை சோல் பிளேட் என்கிறோம். அங்குதான் இந்த கறை இருக்கும். இதைத்தான் இப்போது சுத்தம் செய்யப் போகிறோம். இதற்கு சாதாரணமாக வீட்டில் இருக்கும் உப்பே போதுமானது.

ஒரு வெள்ளை டவலை எடுத்துக் கொள்ள வேண்டும். அதை அயர்ன் செய்யும் டேபிளின் மீது விரித்து விட்டு, டவலின் மேல் அப்படியே ஒரு கையளவுக்கு உப்பை எடுத்து பூப்போல் தூவ வேண்டும். சாதாரணமாக உப்பு தடவிய டவலின் மேல் அயர்ன் பாக்ஸை வைத்து தேய்த்துப் பாருங்கள். சிறிது நேரத்தில் அயர்ன்பாக்ஸின் அடிப்பகுதியான சோல் பிளேட்டில் கறைகள் மாயமாகி இருக்கும். பிறகென்ன உங்க அயர்ன் பாக்ஸும் புதிது போல பளிச்சென்று இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet