Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

மின் கட்டணம் எகிறி விட்டதா? இதை செய்தால் கரண்ட் பில் பாதியாகிவிடும்…

0 Comments

Published on: Sunday, August 2nd, 2020 at 10:53 AM

மின் கட்டணம் எகிறி விட்டதா? இதை செய்தால் கரண்ட் பில் பாதியாகிவிடும்…

கொரோனா காலத்தில் வருமானம் இல்லாமல் பலரும் தவித்து வரும் சூழலில், பலரது வீடுகளில் மின் கட்டணம் தாறுமாறாக எகிறியுள்ளது. இதை கட்டுப்படுத்த சில எளிய வழிகளை பின்பற்றினால் போதும்…

கொரோனா ஊரடங்கு காலத்தில் மின் கட்டணம் பல மடங்கு அதிகரித்துவிட்டதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். மின்சாரக் கட்டணத்தைப் பொறுத்தவரை முதல் 100 யூனிட் இலவசம். அதற்கு மேல் நாம் பயன்படுத்தும் யூனிட்டுகளைப் பொறுத்து கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதாவது 200 யூனிட், அதற்கு மேல் 500 யூனிட் வரை அதற்கு மேல் என உதாரணமாகச் சொல்லலாம்.

மின்கட்டணத்தை எப்படி குறைப்பது?

மின் கட்டணத்தை குறைக்க முதலில் செய்ய வேண்டியது எல்.இ.டி. பல்புகளை பொறுத்துவதுதான். எந்த மின்சாதனப் பொருள் வாங்கினாலும், அதில் ஸ்டார் கொண்ட பொருட்களை வாங்க வேண்டும். மின் விசிறிக்கு எலக்ட்ரானிக் ரெகுலேட்டர் பயன்படுத்த வேண்டும். வாசிங் மெஷினை அதன் முழுத் திறனுக்கான துணி இருந்தால் மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஒன்றிரண்டு துணிகள் இருக்கிறது என்றால், கைகளாலேயே அலசமாம். இதனால் மின் கட்டணம் குறைவதோடு, தண்ணீர் செலவும் மிச்சம்.

ஃபிரிட்ஜ் கதவை அடிக்கடி திறக்கக் கூடாது. குழந்தைகள் அடிக்கடி ஃபிரிட்ஜ் அருகில் செல்வதை அனுமதிக்காதீர்கள். அவர்கள் ஃபிரிட்ஜை திறந்துவைத்துக் கொண்டு வேடிக்கை பார்ப்பதுதான் வாடிக்கையாக இருக்கும். இதனாலேயே மின் கட்டணம் எகிறும். நீங்கள் ஒருமுறை திறக்கும்போதே தேவையான அனைத்து பொருட்களையும் எடுத்துவிட வேண்டும்.

அடிக்கடி ஃபிரிட்ஜை திறந்து மூடுவதால், மின்சார பயன்பாடு அதிகரித்து, யூனிட் ராக்கெட் வேகத்தில் ஓடும். இதேபோல், இண்டக்சன் ஸ்டவ்வில் தட்டையான பாத்திரத்தை பயன்படுத்துங்கள். இதனால், பாத்திரம் சீக்கிரம் சூடாகுவதோடு, மின் செலவும் குறையும்.

வீட்டில் புது டிவி வாங்கினால், எல்.ஈ.டி. அல்லது ஓ.எல்.ஈ.டி. டிவிக்களை வாங்குங்கள். இதுவும் மின் கட்டணத்தை மிச்சப்படுத்தும். சில ஆயிரம் ரூபாய்க்காக யோசித்து, பழைய மாடல் டிவிக்களை வாங்கிவிட்டால், அந்த டிவி இருக்கும் வரை பல ஆயிரம் ரூபாய்களை மின் கட்டணத்தை செலுத்த வேண்டியிருக்கும். இதை எல்லாம் செய்து பாருங்கள். உங்கள் வீட்டில் மின் கட்டணம் பாதியாகிவிடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet