Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

கொரோனா ஹாட் ஸ்பாட்களாக சிங்கப்பூர் டார்மிடரிகள் – தமிழர்களின் நிலை?

0 Comments

Published on: Thursday, May 14th, 2020 at 8:00 PM

கொரோனா ஹாட் ஸ்பாட்களாக சிங்கப்பூர் டார்மிடரிகள் – தமிழர்களின் நிலை?

தமிழர்கள் அதிகமாக வசிக்கும் சிங்கப்பூரில் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தங்குமிடங்கள் கொரோனா ஹாட் ஸ்பாட்களாக மாறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிங்கப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இதில் ஏறக்குறைய 90 சதவீதத்தினர் வெளிநாட்டுத் தொழிலாளர்கள். நம் நாட்டில் ஊரடங்கால் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுபோல, சிங்கப்பூரிலும் தமிழர்கள் உள்பட பல்வேறு வெளிநாட்டுத் தொழிலாளர்களின் நிலை உள்ளது. அதிலும் அடுக்கு படுக்கைகள் கொண்ட தங்குமிடங்களான டார்மிடரிகள்தான் கொரோனா ஹாட் ஸ்பாட்டுகளாக உருவெடுத்துள்ளன.

1990களில் கட்டிடப் பணிகளுக்காக இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் சென்றபோது அவர்களுக்காகவே கட்டப்பட்ட தங்குமிடங்கள்தான் டார்மிடரிகள். இன்று 43 மிகப்பெரிய தங்குமிடங்கள் உள்ளபோதும் அவற்றின் அவல நிலை மாறவில்லை என்பதுதான் வேதனை.

சிங்கப்பூரில் கொரோனா பரவத் தொடங்கியபோது நெருக்கடியான படுக்கைகளைக் கொண்ட இந்த தங்குமிடங்களில் வசித்த வெளிநாட்டுத் தொழிலாளர்களின் நிலை அச்சத்தை தருவதாக இருந்தது. அதை ஆமோதிப்பதுபோல புன்கோலில் உள்ள எஸ் 11 என்ற தங்குமிடத்தில் மார்ச் இறுதியில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

கடந்த ஒன்றரை மாதங்களில் அந்த ஒரு தங்குமிடத்தில் மட்டும் 2,550 வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள அடுக்கு படுக்கை தங்குமிடங்களில் இதுவரை நடந்த சோதனைகளில் 22,000 தொழிலாளர்களுக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இவர்கள் அனைவருக்குமே சிறிய அறிகுறிகள் இருப்பதால் விரைவில் குணமடைவார்கள் என்பது மட்டுமே ஆறுதலான செய்தி. அதனால் பல இடங்களில் இருந்த தொழிலாளர்கள் வேறு பகுதிகளுக்கு மாற்றப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தங்களது பொருளாதாரத்தின் ஒரு அங்கம் என கூறியுள்ள சிங்கப்பூர் அரசு, மீதமுள்ள 3,30,000 தொழிலாளர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படும் என கூறியுள்ளது. தனிமைப்படுத்தும் காலம் முடியும் வரை தொழிலாளர்களுக்கான உணவு, தங்குமிடம் உள்ளிட்ட வசதிகளையும் சிங்கப்பூர் அரசே செய்து கொடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet