Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

மளமளவென சரியும் வீட்டுக்கடன் வட்டி… எந்த வங்கியில் என்ன வட்டி தெரியுமா?

0 Comments

Published on: Thursday, July 23rd, 2020 at 9:01 PM

மளமளவென சரியும் வீட்டுக்கடன் வட்டி… எந்த வங்கியில் என்ன வட்டி தெரியுமா?

வங்கிகள் இதுவரை இல்லாத வகையில் வீட்டுக்கடன் மீதான வட்டியை குறைத்து வருகின்றன. இதனால் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

கொரோனா காலத்தில் ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவை சீர்செய்ய, இந்திய ரிசர்வ் வங்கி தொடர்ந்து வட்டி விகிதங்களை குறைத்து கொண்டே இருந்தது. மார்ச் மாத இறுதியில் 0.75 சதவீதமும், மே மாதம் 0.40 சதவீதமும் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைத்தது.

இதை தொடர்ந்து பாரத ஸ்டேட் வங்கி தொடங்கி அனைத்து வங்கிகளும் வீட்டு கடன் மீதான வட்டியை குறைத்து வருகின்றன. எல்..சி. ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் வழங்கும் வீட்டுக்கடன் மீதான வட்டியை இதுவரை இல்லாத அளவிற்கு குறைத்து, 6.9 சதவிதமாக குறைத்துள்ளது.

அதாவது, ரூ.50 லட்சம் வரை பெறப்படும் வீட்டுக்கடனுக்கு குறைந்தபட்ச வட்டி வீதம் 6.9 சதவீதத்தில் இருந்து தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவரின் சிபில் ஸ்கோரை பொறுத்து இந்த வட்டி வீதம் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரத ஸ்டேட் வங்கி வீட்டுக்கடன் வட்டியின் குறைந்தபட்ச அளவாக 6.95 சதவீதமாக குறைத்துள்ளது. இது கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் இருந்த வட்டி வீதம் என்பதால், 2004ஆம் ஆண்டு இருந்ததை போல், வீட்டுக்கடன் வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளதாக பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.

எச்.டி.எஃப்.சி. வங்கி வழங்கும் வீட்டு கடன் வட்டி விகிதமும், 6.90 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. மற்றொருபுறம், பேங்க் ஆஃப் இந்தியா, சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா போன்ற வங்கிகள் இன்னும் குறைவாக, 6.85 சதவீதமாக வட்டியை குறைத்துள்ளனயூனியன் பாங்க் ஆப் இந்தியாவில், வீட்டுக்கடன் வட்டி, 6.70 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

இதற்கு மேல் குறைவான வட்டியை வங்கிகளால் வழங்க முடியாது என்றாலும், ஒருவரின் சிபில் ஸ்கோரை பொறுத்து, வட்டி விகிதங்கள் அதிகரிக்கும் என்பது கவனிக்கதக்கது. வட்டி விகிதம் குறைவாக இருந்தாலும், வீட்டுக்கடன் வழங்கும் போது, வங்கிகள் விதிக்கும் பிராசசிங் கட்டணம், பதிவு கட்டணம் போன்ற இதர கட்டணங்களில் மாறுபாடு இருக்கும் என்பதால், வீட்டுக்கடன் வாங்கும் போது வங்கிகள் விதிக்கும் கூடுதல் கட்டணங்களையும் கணக்கில் கொள்ள வேண்டும் என்ற கருத்தும் முன் வைக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet