Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

2 மாதங்களுக்கு பின் பார்த்த உரிமையாளர் – கண்ணீர் சிந்திய கழுதை – வீடியோ…

0 Comments

Published on: Sunday, May 24th, 2020 at 6:19 PM

2 மாதங்களுக்கு பின் பார்த்த உரிமையாளர் – கண்ணீர் சிந்திய கழுதை – வீடியோ…

கொரோனா ஊரடங்கால் 2 மாதங்களாக உரிமையாளரை பிரிந்து இருந்த கழுதை அவரைக் கண்டதும் கண்கலங்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

ஸ்பெயினைச் சேர்ந்த இஸ்மாயில் ஃபெர்னாண்டஸ் என்பவர் செல்லமாக பால்டோமேரா என்ற கழுதையை வளர்த்து வந்தார். கொரோனா ஊரடங்கால் நகரப்பகுதியில் உள்ள ஃபெர்னாண்டஸ், பண்ணை வீட்டில் வளரும் அவரது செல்லப்பிராணியை 2 மாதங்களாக சந்திக்க முடியாமல் போனது.

ஸ்பெயினில் ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் உடனடியாக தனது பண்ணை வீட்டிற்கு ஓடோடி வந்த இஸ்மாயில் தன் செல்லப்பிராணியை அழைத்தார். அவரது குரல் கேட்டதும் அருகில் வந்த பால்டோமேராவைக் கண்டு கண்ணீர் சிந்தினார் இஸ்மாயில்.

தனது பாசமிக்க உரிமையாளரை மீண்டும் கண்ட மகிழ்ச்சியில் கழுதையும் உற்சாகமாகக் கத்தி ஆனந்தக் கண்ணீர் வடித்தது. பிரிந்தவர் கூடிய இந்த நெகிழ்ச்சித் தருணம் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet