Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

நிர்வாணப் படத்தை வெளியிடுவேன் – பெண் போலீசையே மிரட்டிய மளிகைக்கடை உரிமையாளர்…

0 Comments

Published on: Thursday, May 28th, 2020 at 7:11 PM

நிர்வாணத்தை படத்தை வெளியிடுவேன் – பெண் போலீசையே மிரட்டிய மளிகைக்கடை உரிமையாளர்…

திருநெல்வேலியில் 7 லட்சம் ரூபாய் மற்றும் 5 சவரன் நகையை ஏமாற்றி வாங்கிய நபரிடம் திருப்பிக் கேட்டபோது, நிர்வாணப் படத்தை வெளியிடுவேன் என பெண் போலீசையே மிரட்டியுள்ளார்.

திருநெல்வேலி ராதாபுரத்தைச் சேர்ந்தவர் சிவபிரேம்குமார். மளிகைக்கடை உரிமையாளரான இவர், லோக்கலில் இயங்கிவரும் செய்தி வெப்சைட்டில் ரிப்போர்ட்டராகவும் பணியாற்றுவதாக கூறப்படுகிறது. இதை வைத்து பலரை மிரட்டுவதையே சிவபிரேம்குமார் தொழிலாக செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இவரது முதல் மனைவி குடும்பப் பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொண்டதால், இவருக்கும், நாங்குநேரி காவல் நிலையத்தில் தலைமைப் பெண் காவலராக பணியாற்றும் தங்கராணி என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்தபோது, மளிகைக்கடையை விரிவாக்கம் செய்ய பணம் தேவை எனக் கூறி, தங்கராணியிடம் 7 லட்சம் ரூபாயை வாங்கியுள்ளார். அதன்பிறகு ஏதேதோ காரணங்களைச் சொல்லி, தங்கராணியிடம் இருந்த 5 சவரன் நகைகளையும் ஏமாற்றி வாங்கியுள்ளார்.

திருமணம் செய்யாவிட்டாலும், காலம் முழுவதும் இவருடன் தானே வாழப்போகிறோம் எனக் கருதிய தங்கராணியும் பணம், நகைகளை கொடுத்துள்ளார். அதன்பிறகு, தேவையில்லாமல் அடிக்கடி பிரச்சனை செய்துள்ளார் சிவபிரேம்குமார். ஒரு கட்டத்தில் நான் ரிப்போர்ட்டர். நான் நினைத்தால் உன் வேலையை காலி செய்து விடுவேன் என தங்கராணியை மிரட்டியுள்ளார்.

இனி சிவபிரேம்குமாருடன் வாழ முடியாது என முடிவு செய்த தங்கராணி, தனது பணம், நகைகளை திருப்பிக் கேட்டுள்ளார். ஆனால், பணம், நகைகளை தர முடியாது எனக் கூறிய சிவபிரேம்குமார், தேவையில்லாமல் பிரச்சனை செய்தால் தங்கராணியின் நிர்வாணப் படத்தை தான் வேலைபார்க்கும் வெப்சைட்டில் வெளியிடுவேன் என மிரட்டியுள்ளார்.

இதையடுத்து, ராதாபுரம் காவல்நிலையத்தில் தங்கராணி புகார் அளித்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், சிவபிரேம்குமாரை வலைவீசி தேடி வருகின்றனர்.

tamilxpressnews.com

தமிழ் எக்ஸ்பிரஸ் நியூஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet