Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

போதை தந்தையால் 9 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் – காமுகனின் வீட்டை சூறையாடிய மக்கள்…

0 Comments

Published on: Friday, December 20th, 2019 at 10:51 PM

போதைக்கு அடிமையான தந்தையால், அவனது நண்பர்களே 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த தம்பதிக்கு 9 வயது மகளும், 7 வயது மகனும் உள்ளனர். குடும்பத் தகராறு காரணமாக, தாய் பிரிந்து சென்றுவிட்ட நிலையில், குழந்தைகள் இருவரும் தந்தையுடன் வசித்து வந்தனர்.

கூலித் தொழிலாளியான தந்தை, குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி, சரியாக வேலைக்குச் செல்லாமல், முழு நேரமும் போதையிலேயே சுற்றி வந்துள்ளான். இதனால், குழந்தைகள் இருவரும் பள்ளிக்குச் செல்லாமல், அக்கம்பக்கத்தில் சில வேலைகளை செய்து, சம்பாதித்துள்ளனர்.

அந்த பணத்தையும் பிடுங்கிக் கொள்ளும் தந்தை, தனது நண்பர்களை வீட்டுக்கே அழைத்து வந்து, மது குடிப்பதையும் வழக்கமாக்கிக் கொண்டான். நாளுக்கு நாள் தந்தையின் அட்டூழியம் அதிகரித்து வந்தாலும், தங்களால் ஒன்றும் செய்ய முடியாமல் தவித்துள்ளனர் குழந்தைகள் இருவரும்.

இந்நிலையில், கடந்த புதன்கிழமை இரவு சிறுமியின் தந்தை, அதே பகுதியை சேர்ந்த மயிலான் மற்றும் அருணாச்சலம் ஆகியோருடன் மதுபோதையில் வீட்டுக்கு வந்துள்ளான். அப்போது, சிறுமியும், அவரது தம்பியும் தூங்கிக் கொண்டிருந்தனர். போதை தலைக்கேறிய தந்தையும், படுத்து தூங்கிவிட்ட நிலையில், அவனை அழைத்து வந்த இருவரும் சிறுமியை நோட்டமிட்டுள்ளனர்.

சிறுமியின் தந்தை மது போதையில் ஆழ்ந்து தூங்கிவிட்டதை உணர்ந்த காமுன்கள் இருவரும், சிறுமியின் வாயைப் பொத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். சிறுமி கதறவும் முடியாமல், வலியும் பொறுக்க முடியாமல் துடித்துள்ளார். அதை கண்டுகொள்ளாமல் இருவரும் சிறுமியை சீரழித்துவிட்டு, வீட்டுக்குச் சென்றுள்ளனர்.

மறுநாள் தனக்கு நடந்த கொடுமையை வெளியே சொல்லமுடியாத சிறுமி சோர்வாக காணப்பட்டுள்ளார். வழக்கமாக சுறுசுறுப்பாக இருக்கும் சிறுமி, அன்று எதுவும் பேசாமல் இருப்பதை பார்த்த அக்கம் பக்கத்தினர், விசாரித்தபோது தான் சிறுமிக்கு நடந்த கொடூரம் வெளியே தெரியவந்தது. இதனால், ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் அருகில் இருந்த மயிலனின் வீட்டை அடித்து நொறுக்கி சூறையாடினர்.

சிறுமியின் உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், சிறுமியை சீரழித்த அருணாச்சலத்தை கைது செய்த போலீசார், தந்தையையும், மயிலனையும் தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet