Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

மகிழ்ச்சியில் திரைத்துறை – பொங்கலுக்கு வெளியாகும் ரஜினி படம்…

0 Comments

Published on: Wednesday, May 13th, 2020 at 7:28 PM

மகிழ்ச்சியில் திரைத்துறை – பொங்கலுக்கு வெளியாகும் ரஜினி படம்…

விஜய் நடிக்கும் மாஸ்டர், கமலின் இந்தியன் 2 உள்ளிட்ட பல படங்களின் பணிகள் மீண்டும் தொடங்கியிருப்பதால், திரைத்துறையினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனிடையே ரஜினியின் அண்ணாத்த திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கால் தமிழ் திரையுலகம் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக முடங்கியிருந்த நிலையில், போஸ்ட் புரொடக்சன் பணிகளை மட்டும் அதிகபட்சம் 5 பேருடன் தொடங்கலாம் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இதைதொடர்ந்து முதல்கட்டமாக 20க்கும் மேற்பட்ட படங்களின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் தொடங்கியிருப்பதாக ஃபெப்ஸி அறிவித்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் விஜய் நடிப்பில் உருவாகி வரும் மாஸ்டர் படத்தின் படத்தொகுப்பு பணிகள் எஞ்சியிருந்த நிலையில் அவை மீண்டும் தொடங்கியுள்ளன. ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்துவரும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு 60 சதவிகிதம் முடிந்திருந்த நிலையில் விபத்து காரணமாகவும், அதைதொடர்ந்து ஊரடங்கு உத்தரவாலும் படப்பிடிப்பு நிறுத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் ஏற்கெனவே படமாக்கப்பட்ட காட்சிகளை தொகுக்கும் பணியில் படக்குழு இறங்கியுள்ளனர்.

இதேபோல் சிவகார்த்திகேயனின் டாக்டர், த்ரிஷாவின் ராங்கி, விஷாலின் சக்ரா ஆகிய படங்களின் எடிட்டிங் பணிகளும், நயன்தாராவின் மூக்குத்தி அம்மன், ஜெயம் ரவியின் பூமி, சிபிராஜின் கபடதாரி படங்களின் டப்பிங் பணிகளும் தொடங்கியுள்ளன. இத்தகவலை டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள தயாரிப்பாளர் தனஞ்செயன், அரசின் விதிக்கு உட்பட்டு கபடதாரி படத்தின் டப்பிங் பணிகளை நடத்தி வருவதாக கூறியுள்ளார்.

போஸ்ட் புரொடக்சன் பணிகள் மட்டுமே என்றாலும் நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் பணியாற்ற தொடங்கி இருப்பதால் தமிழ் திரையுலகினர் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர். இதனிடையே, நடிகர் ரஜினி நடித்து வரும் அண்ணாத்த திரைப்படம் ஆயுத பூஜைக்கு பதிலாக, பொங்கலுக்கு வெளியாகும் என தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet