Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

3 மனைவிகள்… 11 பிள்ளைகள்… அடங்காத காமவெறி… பெற்ற மகளை அடையத் துடித்த தந்தை…!

0 Comments

Published on: Thursday, December 12th, 2019 at 8:19 PM

புதுக்கோட்டையில் 3 பெண்களைத் திருமணம் செய்து, 11 பிள்ளைகளைப் பெற்ற பின்னரும், காமவெறி அடுங்காத ஒருவன், பெற்ற மகளையே அடையத் துடித்து அதற்கு தடையாக இருந்த 2வது மனைவியை வெட்டிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டைச் சேர்ந்த முருகேசன், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சாராயம் காய்ச்சி விற்றுள்ளார்.  அப்போது பல்வேறு தகராறில் ஈடுபட்ட அவர், ஒரு கட்டத்தில் உயிருக்கு பயந்து, புதுக்கோட்டை மாவட்டம் புத்தாம்பூர் அருகே தேனிப்பட்டி கிராமத்தில் குடியேறினார். அவருக்கு மனோன்மணி, பானுமதி, தனலட்சுமி என 3 மனைவிகள். முதல் மனைவிக்கு 8 பிள்ளைகளும், இரண்டாவது மனைவிக்கு இரண்டு பிள்ளைகளும், மூன்றாவது மனைவிக்கு ஒரு மகனும் உள்ளனர். அதன்பிறகும் காமவெறி பிடித்து திரிந்த முருகேசனுடன் கோபித்துக் கொண்டு, முன்றாவது மனைவி தனலட்சுமி, தனது சொந்த ஊரான கொடைக்கானலுக்குச் சென்றுவிட்டார்.

ஆனால், முருகேசனின் முதல் மனைவியும், இரண்டாவது மனைவியும் தேனிப்பட்டி கிராமத்தில் அருகருகே வீடுகளில் வசித்தனர். இருவரையும் வைத்து குடும்பம் நடத்தி வந்த முருகேசன், சரியாக வேலைக்குப் போகாமல் பெண்கள் பின்னால் சுற்றுவதையே வாடிக்கையாக வைத்திருந்தார். இதனால், முதல் மனைவி விவசாய வேலைகளையும், இரண்டாவது மனைவி ஆடு மேய்க்கும் வேலையையும் செய்துவந்தனர்.

இரண்டாவது மனைவியின் மகள் பாடல் பாடுவதில் வல்லவர். பிளஸ் டூ முடித்துவிட்டு வீட்டில் இருந்த அவரும் சுற்றுவட்டார கிராமங்களில் கச்சேரிகளுக்குச் சென்று பாடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். அவருக்கு துணையாக அவரது தந்தை முருகேசனும் சென்று வருவது வழக்கம். இவ்வாறு பல இடங்களுக்கு மகளை அழைத்துச் சென்ற முருகேசனுக்கு, ஒரு கட்டத்தில் பெற்ற மகள் மீதே ஆசை ஏற்பட்டது. இதையடுத்து, மகளை மடக்கி அனுபவிக்க முயற்சித்த முருகேசன்,  மகளுக்கு தனது செல்போனில் ஆபாச வீடியோக்களை போட்டு காண்பித்துள்ளான். அதை பார்க்காமல் தவிர்த்து வந்த நிலையில், ஒரு முறை பேருந்தில் அருகருகே அமர்ந்திருந்தபோது, மகளிடம் அத்துமீறியுள்ளான் முருகேசன். இதனால் அதிர்ச்சியடைந்த மகள், இனிமேல் இவ்வாறு நடந்து கொண்டால், தாய் பானுமதியிடம் கூறிவிடுவேன் என மிரட்டியுள்ளார்.

அதை கண்டுகொள்ளாத முருகேசன், ஒரு சில நாட்களுக்கு பிறகு குடிபோதையில் வீட்டுக்கு வந்தபோது, மகள் தனியாக இருப்பதை பார்த்துள்ளான். காமவெறி தலைக்கேற, மகள் மீது பாய்ந்ததை பார்த்த பக்கத்துவீட்டில் இருந்த முதல் மனைவி, இதை தடுத்துள்ளார். பின்னர், இரண்டாவது மனைவி பானுமதியிடமும் இதைக் கூறியுள்ளார் மனோன்மணி. வேலைக்கு போகாமல் ஊரைச் சுற்றித் திரிந்த கணவன், தற்போது தனது மகளையும் அடைய முயற்சிப்பதை அறிந்த பானுமதி, முருகேசனை சரமாரியாகத் திட்டியுள்ளார். அதன்பிறகு முருகேசனை பார்க்கும் போதெல்லாம் திட்டியதோடு, தனது மகளுக்கும் வரன் தேடியுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த முருகேசன், இனி பானுமதியை உயிரோடு விட்டால், மகள் தனக்கு கிடைக்க மாட்டாள் என நினைத்து, மனைவியை தீர்த்துக் கட்ட முடிவு செய்தான். சம்பவத்தன்று பானுமதி அருகில் உள்ள தைலமரக் காட்டிற்கு ஆடு மாய்க்கப் போயிருந்தார். அப்போது மழையும் பெய்ததால், அங்கு வேறு யாரும் இருக்க மாட்டார்கள் என முடிவு செய்த முருகேசன், பானுமதியை  தேடி போயுள்ளான். தான் நினைத்த மாதிரியே மனைவி தனியாக இருப்பதை உறுதி செய்த முருகேசன், ஆடுகளுக்கு இலை வெட்ட பயன்படுத்தப்படும் அரிவாளை எடுத்து, பானுமதியை சரமாரியாக வெட்டியுள்ளான்.

மரண ஓலத்துடன் கீழே விழுந்து துடிதுடித்து பானுமதி உயிரிழப்பதைப் பார்த்த முருகேசன், பின்னர் ஒன்றும் தெரியாததுபோல வீட்டுக்கு வந்துள்ளான். மழை நின்ற பிறகு, தைலமரக் காட்டுப் பகுதிக்குச் சென்ற பொதுமக்கள் சிலர், பானுமதி உடலைப் பார்த்து, முருகேசனுக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால், வேறு யாரோ தனது மனைவியை கொலை செய்துவிட்டதாக நாடகமாடி அழுது புலம்பியுள்ளான் முருகேசன்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டபோதுதான், முருகேசன் பெற்ற மகள் என்றும் பாராமல் அவரை அடைய முயற்சித்ததும், அதற்கு பானுமதி தடையாக இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து முருகேசனை பிடித்து தங்களது வழக்கமான பாணியில் விசாரித்தபோது, மனைவியை கொலை செய்ததை ஒத்துக் கொண்டான்  முருகேசன். இதையடுத்து, அவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, போலீசார் சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet