0 Comments
Published on: Wednesday, June 24th, 2020 at 10:26 AM
2023 உலகக் கோப்பையில் விளையாடுவேன் – வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் நம்பிக்கை…
2023 கிரிக்கெட் உலகக்கோப்பையில் இந்திய அணிக்காக விளையாட முடியும் என வேகப்பந்து வீச்சாளார் ஸ்ரீசாந்த் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
2013ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் மேட்ச் பிக்சிங் புகாரில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால், வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்திற்கு 7 ஆண்டு தடை விதிக்கப்பட்டது. தடை உத்தரவு வரும் செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைய உள்ளதால், ரஞ்சிக் கோப்பை போட்டியில் விளையாடும் கேரள அணிக்கான உத்தேச வீரர்கள் பட்டியலில் ஸ்ரீசாந்தின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், 2023ஆம் ஆண்டு தனக்கு 40 வயதாகும் என்றபோதும் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க முடியும் என நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார். தடைக் காலத்தில் தனக்கு ஏற்பட்ட நிலை எதிரிக்கும் வரக் கூடாது என்றும் ஸ்ரீசாந்த் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
No comments yet