Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

கூகுளை தொடர்ந்து ஃபேஸ்புக்… ஊரடங்கு காலத்திலும் உற்சாகமடையும் ஊழியர்கள்..!

0 Comments

Published on: Friday, August 7th, 2020 at 9:33 PM

கூகுளை தொடர்ந்து ஃபேஸ்புக்ஊரடங்கு காலத்திலும் உற்சாகமடையும் ஊழியர்கள்..!

ஃபேஸ்புக் நிறுவனம் தனது ஊழியர்களை 2021 ஜூலை வரை வீட்டிலிருந்தே பணியாற்றுமாறு உத்தரவிட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், பல்லாயிரம் பேர் பலியாகிவிட்டனர். இதனால், பலர் வெளியிடங்களுக்கு செல்ல அஞ்சுகின்றனர். இந்நிலையில், பேஸ்புக் நிறுவனம் Work from Home என்பதை நீட்டித்துள்ளனர்.

அரசு மற்றும் சுகாதார வல்லுநர்களிடம் கலந்து ஆலோசித்த பின் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. வீட்டிலிருந்து பணியாற்றும் ஊழியர்களின் தேவைக்காக ரூ.75,000 வரை போனஸ் வழங்கப்படும் என்றும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது. பல நிறுவனங்கள் ஊதியத்தை குறைத்து வரும் நிலையில், ஃபேஸ்புக் மட்டுமே போனஸ் வழங்க முன்வந்துள்ளது.

கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் அரசு வழிகாட்டுதலுக்கு ஏற்ப குறைந்த ஊழியர்களுடன் அலுவலகங்கள் இயங்கும் என்றும் ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. 2021 ஜூன் மாதம் வரை ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றலாம் என கடந்த மாதம் கூகுள் நிறுவனம் அறிவித்ததை அடுத்து, தற்போது ஃபேஸ்புக்கும் இந்த திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet