Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

இ.எம்.ஐ. செலுத்த மேலும் 3 மாத அவகாசம் – வீடு, வாகனக் கடன் வட்டியும் குறைகிறது…!

0 Comments

Published on: Friday, May 22nd, 2020 at 7:36 PM

இ.எம்.ஐ. செலுத்த மேலும் 3 மாத அவகாசம் – வீடு, வாகனக் கடன் வட்டியும் குறைகிறது…!

கடன்களுக்கான இ.எம்.ஐ. தவணையை செலுத்த, மேலும் 3 மாத காலம் அவகாசம் வழங்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து பொருளாதாரத்தை மீட்டெடுக்க, அண்மையில் ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான ஊக்குவிப்பு திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. அதை தொடர்ந்து, மும்பையில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்ததாஸ், வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தையும், ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதத்தையும் 0.40% குறைப்பதாக அறிவித்துள்ளார்.

ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பின் மூலம் வீட்டுக்கடன் மற்றும் வாகனக் கடன் மீதான வட்டி குறையும். அதே போல், ஏற்கனவே கடனுக்கான மாத தவணையை செலுத்த மே 31ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில், ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுள்ளதால், மாத தவணையை செலுத்துவதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் வீடு, வாகனம் என அனைத்து வகையாக கடனுக்கான மாத தவணையையும் செலுத்த மேலும் 3 மாத காலம் அவகாசம் வழங்கப்படும். இது குறித்து அந்தந்த வங்கிகள் விரைவில் அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும், ஊதிய நெருக்கடி இருப்பவர்களைத் தவிர, மற்றவர்கள் தவணை சலுகை திட்டத்தை பயன்படுத்த வேண்டாம் என பொருளாதார நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். அவ்வாறு சலுகையை பயன்படுத்தினால், வங்கிகள் போடும் வட்டி மற்றும் கூடுதல் கட்டணங்களால் தற்போதுள்ள கால அளவை விட கூடுதல் மாதங்கள் இ.எம்.ஐ. செலுத்த வேண்டியிருக்கும் என்றும் எச்சரித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet