0 Comments
Published on: Thursday, August 6th, 2020 at 10:28 PM
உங்களுக்கு இதய நோய் இருக்கிறதா? கண்டுபிடிப்பது மிகவும் எளிதுதான்…
உலகம் முழுவதும் தற்போது கொரோனா அச்சுறுத்தல் இருந்தாலும், மனிதர்களுக்கு எப்போதும் அச்சுறுத்தலாக இருப்பது இதயநோய். முன்பெல்லாம் அங்கொன்றும், இங்கொன்றுமாகத்தான் இதய நோயை கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆனால், தற்போது குடும்பத்தில் ஒருவருக்கு இதய நோய் இருக்கிறது.
மாறி வரும் உணவுக் கலாச்சாரம்தான் இதற்கு முக்கிய காரணம். இத்தகைய சூழலில் இதய நோய் இருக்கிறதா? இல்லையா? எதிர்காலத்தில் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறதா என தெரிந்து கொள்ள சுலபமான வழி இருக்கிறது.
நமது கால் விரல்களை குனிந்து தொடுவதன் மூலமே நமக்கு இதயநோய் இருக்கிறதா என அறிந்து கொள்ள முடியும். நின்ற நிலையில், தரையில் அமர்ந்தபடியும் இதைச் செய்யலாம். நிற்பதாக இருந்தால், நமது இரு கால்களையும் சேர்த்து நிமிர்ந்து நிற்க வேண்டும்.
அமர்ந்து இருந்தால் சமமான தளத்தில் கால்கள் இரண்டையும் முன்புறமாக நீட்டி உட்கார வேண்டும். கால் முட்டியை மடக்காமல் கைகளை நீட்டி, கால் விரல்களை தொட முடிந்தால் நமது இதயம் ஆரோக்கியமாக இருப்பதை தெரிந்து கொள்ளலாம். அப்படி தொடர் முடியவில்லை என்றால் நமக்கு சிக்கல் இருக்கிறது.
அதாவது தொப்பை இருப்பவர்கள், அதிக கொழுப்பு, ரத்த அழுத்தம் உள்ளவர்களால் இதைச் செய்ய முடியாது. இதெல்லாம் உள்ளவர்களுக்கு இதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். அதனால் இப்போதே இதைச் செய்யுங்கள்.
செய்ய முடிந்தவர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள். செய்ய முடியாதவர்கள் உடலை குறைத்து, ஆரோக்கிய உணவுப் பழக்கவழக்கத்திற்கு மாறுங்கள்…
No comments yet