Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

”எங்கப் போற… நில்லு…” குடிபோதையில் கருநாகத்துடன் சண்டைப் போட்ட ஆசாமி… கடைசியில் பாம்பு உயிரிழந்த பரிதாபம்…!

0 Comments

Published on: Sunday, January 5th, 2020 at 2:02 PM

எங்கப் போற நில்லு… என சென்ற வழியை மறித்து வம்பிழுத்த குடிபோதை ஆசாமியை பலமுறை கொத்திய கருநாகம், கடைசியில் பரிதாபமாக உயிரிழந்தது.

ராஜஸ்தான் மாநிலம் பாகிரித் பகுதியைச் சேர்ந்தவர் காஜான். அதே பகுதியில் உள்ள தீப்பெட்டித் தொழிற்சாலையில் கூலி வேலை பார்த்து வரும் இவர், போதைக்கு அடிமையானவர்.

கடந்த வெள்ளிக்கிழமை வழக்கம்போல் குடித்துவிட்டு, வயல்வெளியை ஒட்டிய பகுதியில் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, கருநாகம் ஒன்று, அவ்வழியாக சென்று கொண்டிருந்ததை பார்த்த காஜான், திடீரென கருநாகம் சென்ற வழியில் படுத்துக் கொண்டு அதனுடன் வம்பிழுக்கத் தொடங்கினார்.

ஆரம்பத்தில் சீற மட்டுமே செய்த கருநாகம், குடிபோதை நபரின் தொல்லைகளை பொறுக்க முடியமால் கொத்தத் தொடங்கியது. அப்போதும் அடங்காத காஜான், கருநாகத்தை கையில் எடுத்து, சுற்றுவது, தோளில் போடுவது என பலவகையிலும் தொல்லை கொடுத்தார். இதை அங்கிருந்த இளைஞர்கள் சிலர் வீடியோ எடுத்தபடி, காஜானை எச்சரித்தனர்.

முழு போதையில் இருந்த காஜான், இளைஞர்களின் பேச்சை எல்லாம் கேட்காமல் கருநாகத்தை தொடர்ந்து கொடுமை படுத்தினார். கருநாகமும் பதிலுக்கு அவரை கொத்தியது. காஜான் இறுதிவரை சளைக்காமல் இருந்த நிலையில் சிறிதுநேரத்தில் கருநாகம் பரிதாபமாக உயிரிழந்தது. அப்போதும் கருநாகத்தை விடாமல், தனது தோளில் போட்டுக்கொண்டு வந்த காஜானை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு இளைஞர்கள் கொண்டு சென்றனர்.

அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், கருநாகத்தை அவர் கொடுமை செய்த வீடியோ, சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet