Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

சாலையில் உணவுக்காக கையேந்திய இளம்பெண் – திருமணம் செய்து கொண்ட இளைஞர்..!

1 Comments

Published on: Thursday, May 28th, 2020 at 8:06 PM

சாலையில் உணவுக்காக கையேந்திய இளம்பெண் – திருமணம் செய்து கொண்ட இளைஞர்..!

கொரோனா ஊரடங்கில் ஏழைகளுக்கு உணவு பொட்டலம் வழங்கியபோது, பிச்சை எடுத்த பெண்ணை, இளைஞர் ஒருவர் திருமணம் செய்து கொண்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்தவர் அனில். இவர் அப்பகுதியில் உள்ள தொழிலதிபர் லால்டா என்பவருக்கு கார் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இயல்பிலேயே பலருக்கும் உதவும் கொண்ட குணம் படைத்த தொழிலதிபர் லால்டா பிரசாத், கொரோனா ஊரடங்கில் சாலைகளில் உணவின்றி தவிப்போருக்கு நாள்தோறும் ஒரு வேலை உணவை வழங்கி வந்தார். அவருடன் பயணிக்கும் அனிலும், சாலையோரம் இருக்கும் ஆதரவற்றோரை தேடிப் பிடித்து உணவு வழங்குவார்.

இந்நிலையில், கான்பூரில் உள்ள ஒரு பாலத்துக்கு அருகே நாள்தோறும் ஒரு கூட்டத்துக்கு உணவுகளை வழங்கி வந்தார் அனில். அவர் தரும் உணவுக்காக, அந்த இடத்தில் இளம்பெண் ஒருவர் காத்திருப்பது வழக்கமாகியுள்ளது. அப்போதும் அந்த பெண்ணுக்கும், அனிலுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதை தெரிந்து கொண்ட தொழிலதிபர் லால்டா, நாள்தோறும் இரண்டு முறை அந்த பெண்ணுக்கு உணவு வழங்குமாறு கூறியுள்ளார்.

அதன்படி, நாள்தோறும் 2 முறை உணவு வழங்கிய அனில், பெண் குறித்து விசாரித்தபோது, அவரது பெயர் நீலம் என்றும், சில ஆண்டுகளுக்கு முன்பு தந்தை இறந்துவிட்டதால், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள தாயுடன் வசிப்பதாகவும் கூறியுள்ளார். மேலும், நீலத்தின் சகோதரனும், அவனது மனைவியும் சேர்ந்து விரட்டியதால், தாயுடன் எங்கே செல்வது தெரியாமல் பாலத்துக்கு அடியில் தங்கி பிச்சை எடுத்து சாப்பிட்டு வருவதாகவும் நீலம் தெரிவித்துள்ளார்.

இளம்பெண் நீலத்தின் கதையைக் கேட்டு பரிதாபப்பட்ட அனில், அவரை திருமணம் செய்து கொள்ள விரும்பி, தனது தாய் மற்றும் முதலாளியிடம் இது குறித்து கூறியுள்ளார். அவர்கள் சம்மதம் தெரிவித்த பிறகு, இளம்பெண்ணிடமும் தனது விருப்பத்தை கூறியுள்ளார் அனில். அவரும் சம்மதம் கூறியதை அடுத்து, புத்தர் ஆசிரமத்தில் இளம்பெண் நீலத்தை கைப்பிடித்தார் அனில்.

வாழ்வதற்கு வழியில்லாமல் பிச்சை எடுத்து சாப்பிட்ட இளம்பெண்ணுக்கு உணவு மட்டும் கொடுக்காமல், வாழ்க்கையையே கொடுத்த அனிலின் செயலை பலர் பாராட்டியுள்ள நிலையில், நாடு முழுவதும் அவரது செயல் பிரமிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் எக்ஸ்பிரஸ் நியூஸ்

tamilxpressnews.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1COMMENTS