Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

”இந்த நேரத்துல வெளியில போயிராதீங்க…” எச்சரிக்கை விடுக்கும் வானிலை மையம்…

0 Comments

Published on: Thursday, May 21st, 2020 at 8:18 PM

”இந்த நேரத்துல வெளியில போயிராதீங்க…” எச்சரிக்கை விடுக்கும் வானிலை மையம்…

ஆம்பன் புயல் காற்றின் ஈரப்பதத்தை ஈர்த்துச் சென்றுவிட்டதால், பகல் நேரத்தில் பொதுமக்கள் வெளியில் செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வங்கக்கடலில் உருவான ஆம்பன் புயலால் தமிழகத்திற்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், திசையை மாற்றிக் கொண்டு பயணித்த ஆம்பன் புயல், ஒடிசா, மேற்கு வங்கம் மாநிலங்களில் கடும் சேதத்தை ஏற்படுத்தியதோடு, வங்கதேசத்திலும் கடும் பாதிப்பை உருவாக்கியுள்ளது.

இந்நிலையில், ஆம்பன் புயல் காற்றின் ஈரப்பதத்தை உறிஞ்சி சென்றுவிட்டதால், சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு பகல் நேரங்களில் அனல் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், வயதானவர்கள், நோயாளிகள் மற்றும் குழந்தைகள் பகல் 11 மணி முதல் மாலை 3.30 மணி வரை வெளியில் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet