Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

கண்ணீர் பலவீனமல்ல… அழுகையைக் கட்டுப்படுத்த வேண்டாம்… உடலுக்கு கேடுதான்…

0 Comments

Published on: Monday, August 24th, 2020 at 10:28 AM

கண்ணீர் பலவீனமல்ல… அழுகையைக் கட்டுப்படுத்த வேண்டாம்… உடலுக்கு கேடுதான்…

சோகமான, வருத்தமான நிகழ்வின்போது உணர்ச்சியைக் கட்டுப்படுத்த பொங்கி வரும் கண்ணீரை சிலர் கட்டுப்படுத்துவார்கள். ஆனால், கண்ணீர் அழுகை நல்லது என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

மனதில் வலியை ஏற்படுத்தும் நிகழ்வின்போது ஒவ்வொருவருக்கும் அழுகை வரும். அப்போது சிலர் உணர்ச்சியைக் கட்டுப்படுத்தி, பொங்கி வரும் கண்ணீரையும் அடக்குவார்கள். அவ்வாறு செய்தால் உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். கண்ணீர் பொங்கி வரும்போது நீங்கள் அழாமல் கட்டுப்படுத்துவது உங்கள் மூளைக்கு மன அழுத்தத்தை பதிவு செய்கிறது. கார்டிசோல் ஹார்மோனை வெளியிட்டு அந்த சோகத்தை அதிகரிக்கச் செய்கிறது.

கண்ணீரைக் கட்டுப்படுத்துவதால் இதயத்தோடு தொடர்புடைய அனுதாபத்தை உண்டாக்கும் நரம்புகள் வேகமாக துடிக்கின்றன. எனவே இதயத்துடிப்பு அதிகரிக்கிறது. படபடப்பும் அதிகரிக்கிறது. இதயத்தில் படப்படப்பு தோன்றினாலே மூச்சு விடுவதும் அதிகரிக்கும், முழுமையாக மூச்சு விட முடியாமல் பாதிபாதியாக மூச்சு விடுவார்கள். அழுத்தமாக உணரும்போது மூக்கு மற்றும் நுரையீரல் மூச்சுக் குழாய் இறுக்கமாக மாறுவதே இதற்கு காரணம் என்கின்றனர் மருத்துவர்கள்.

ஹார்மோன்களின் வேகமாக சுரப்பு ரத்தத்தை அதிவேகமாக அனைத்து தசைகளுக்கும் செலுத்தும். இதனால், உங்கள் கண்ம் முன் நிகழ்வது தெரிந்தாலும், அதற்கு செயல்பட மூளையும், உடலும் வேலை செய்யாது. உதாரணமாக, கார் முன்னே வருவது தெரிந்தாலும் விலகிச் செல்ல உடலுக்கு மூளை கட்டளையிடாது. எனவே, சோகத்தால் அழுகை வந்தால், தயங்காமல் கண்ணீர் சிந்துங்கள். கறை நல்லதோ இல்லையோ… ஆனால் கண்ணீர் நல்லது..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet