Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

நான் பாஜகவில் சேரவில்லை… ஆனால்… – திடீர் பல்டி அடித்த திமுக எம்.எல்.ஏ. கு.க.செல்வம்…

0 Comments

Published on: Tuesday, August 4th, 2020 at 7:51 PM

நான் பாஜகவில் சேரவில்லை… ஆனால்… – திடீர் பல்டி அடித்த திமுக எம்.எல்.. கு..செல்வம்

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்.எல்.. கு..செல்வம் பாஜகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியான நிலையில், தொகுதி வளர்ச்சிப் பணிக்காகவே ஜே.பி.நட்டாவை சந்தித்ததாக விளக்கம் அளித்துள்ளார்.

திமுக எம்.எல்..வும், சென்னை மேற்கு மாவட்டச் செயலாளருமான ஜெ.அன்பழகன் கொரோனா தொற்றால் கடந்த ஜூன் 10ஆம் தேதி காலமானார். அதைத் தொடர்ந்து அம்மாவட்ட பொறுப்பில் வருவதற்கு அக்கட்சியினர் இடையே கடும் போட்டி நிலவிய சூழலில், யாரும் எதிர்பாராத வகையில், அந்த பதவிக்கு சிற்றரசு நியமிக்கப்பட்டார். சீனியர்கள் பலர் இருக்கையில் சிற்றரசு நியமிக்கப்பட்டதால் கட்சியின் மூத்த நிர்வாகி சிலர் கடுமையான அதிர்ச்சி அடைந்ததாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், சென்னை மேற்கு மாவட்டத்தில் இருக்கக் கூடிய ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், திமுக தலைமை நிலையச் செயலாளருமான கு..செல்வம் கடுமையான அதிருப்தி அடைந்து உள்ளதாகவும், அதனால் அவர் பாஜகவில் இணைய இருப்பதாகவும் தகவல் வெளியானது. இந்த தகவலை கு..செல்வம் தரப்பு ஏற்கவும் இல்லை. மறுக்கவும் இல்லை. இதையடுத்து, யார் சென்றாலும் திமுக அழிந்து விடாது என கட்சியின் சீனியர்கள் பலர் கருத்து தெரிவிக்கத் தொடங்கினர்.

இதனிடையே மாலையில் டெல்லியில் ஜே.பி.நட்டாவை கு..செல்வம் சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் சந்தித்த அவர், நான் பாஜகவில் இணையவில்லை என்றும், தொகுதி விவரங்கள் குறித்து தெரிவிக்கவே ஜே.பி.நட்டாவை சந்தித்துப் பேசியதாகவும் விளக்கம் அளித்தார்மேலும், திமுகவில் உட்கட்சி தேர்தலை ஸ்டாலின் முறையாக நடத்த வேண்டும் என்றும், தமிழ் கடவுள் முருகனை தவறாக பேசியவர்களை ஸ்டாலின் கண்டிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

கு..செல்வத்தின் இந்த பேட்டி மூலம், அவர் திமுகவில் அதிருப்தியில் இருப்பது தெளிவாகியுள்ளது. திமுக உட்கட்சி தேர்தல் குறித்து அவர் பேசியிருப்பது பல சந்தேகங்களை கிளப்பியிருப்பதோடு, அவர் விரைவில் திமுகவில் இருந்து வெளியேறுவார் என்றே கருதப்படுகிறது. மேலும், ஸ்டாலின் குறித்து கருத்தும் தெரிவித்து இருப்பதால், அவர் திமுகவில் இருந்து விரைவில் நீக்கப்படவும் வாய்ப்பு இருக்கிறது. அதை எதிர்பார்த்தே கு..செல்வம் கருத்து கூறியிருப்பதால், நாமும் அதை எதிர்பார்க்கலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet