Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

ஸ்டீவன் ஸ்பீல்பர்க் (திரை தொழில்நுட்பத்தின் முன்னோடி)

0 Comments

Published on: Monday, November 4th, 2019 at 7:29 PM

திரை தொழில்நுட்பத்தின் முன்னோடி ஸ்டீவன் ஸ்பீல்பர்க் பற்றிய சுவாரஸ்யமான தகவல்…!

1. உலகில் உள்ள பணக்கார இயக்குனர்களில் முதன்மையானவர்.
2. ஹிட்லரை பற்றி Schindler’s List திரைப்படத்தை மிகவும் தத்ரூபமாக எடுத்ததற்காக ஜெர்மனி நாட்டின் உயரிய விருது அவருக்கு வழங்கப்பட்டது. அவர் அந்த படத்திற்காக சம்பளம் வாங்கவில்லை.

3. அமெரிக்காவின் ஜனநாயக கட்சியின் தீவிர ஆதரவாளரான இவர், அக்கட்சியின் முக்கிய நன்கொடையாளர்.
4. நடிகர் டாம் ஹாங்க்ஸ் தான் எல்லா திரைப்படத்திற்கு நாயகனாக நடிக்க வேண்டும் என விரும்புவார் ஸ்பீல்பர்க்… ஆனால் கதைக்காக வேறு ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்தால் மாற்றி விடுவார்.

5. இவர் ஒரு அறிவியல் காதலன், பெரும்பாலும் இவரின் அறிவியல் படங்களே பல படங்களுக்கு முன்னோடியாக இருந்துள்ளன.
6. அனைவரும் ஒரே கதைக்களத்தை நோக்கி ஒடிக்கொண்டிருந்த போது சுறா, போர், வேற்றுகிரகவாசிகள்,மோசடி,வரலாறு,அறிவியல், AI (செயற்கை நுண்ணறிவு) என காலத்தை கடந்து அவர் எடுத்த கதைக்களங்கள் இன்றும் ட்ரெண்ட் செட்டர்கள் தான்.

7. இவரின் ஜுராசிக் பார்க் முதல் பாகம், பெரும்பாலும் உலக மொழிகள் அனைத்திலும் டப் செய்யப்பட்டு மாபெரும் வெற்றி பெற்றது.
8. ஜேம்ஸ் பாண்ட் எடுக்க விரும்பிய ஸ்பீல்பர்க்கின் ஆசையை இரண்டு முறை ஜேம்ஸ் பாண்ட் படங்களை தயாரிக்கும் நிறுவனங்கள் நிராகரித்துள்ளன.

9. அவர் எடுத்த படங்கள் பல ஆயிரம் கோடிகளை அள்ளி இருந்தாலும், அவரின் முதல் முழு நீளப்படம் 1 டாலர் லாபத்தையே தந்தது.
10. ஸ்பீல்பர்க் ஒரு வீடியோ கேம் வெறியர், அவரின் பல போர் படங்களுக்கும், அறிவியல் படங்களுக்கும் கதைக்கருவாக விளங்கியது வீடியோ கேம்கள் தானாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet