Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

ஒரு ரூபாய்தான் கையில இருக்கும் – பசி வயித்த கிள்ளும்… இயக்குநர் சமுத்திரகனியின் சோகமான நினைவலைகள்…

0 Comments

Published on: Friday, July 10th, 2020 at 9:14 PM

ஒரு ரூபாய்தான் கையில இருக்கும் – பசி வயித்த கிள்ளும்… இயக்குநர் சமுத்திரகனியின் சோகமான நினைவலைகள்…

நல்ல திரைப்படங்கள் நல்ல மனிதர்களை உருவாக்கும் என்பார்கள். அப்படியான நல்ல திரைப்படங்களை கொடுக்க ஒவ்வொரு முறையும் கடுமையாக உழைக்கும் இயக்குநர் சமுத்திரகனி, வாழ்க்கையில் கடந்து வந்த பாதை மிக நீளமானது.

இயக்கம், நடிப்பு என அனைத்திலும் கலக்கி வரும் சமுத்திரகனி, தனது வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்மான நிகழ்வுகளை பிரபல ஊடகம் ஒன்றில் அண்மையில் பகிர்ந்தார். அவர் என்ன பேசினார் என்பதை பார்க்கலாம்…

“எனக்கு சின்ன வயசுல இருந்தே படம் பார்க்குறதுல பெரிய ஆர்வம் இல்ல. அப்படி இருந்த என்னை, என் நண்பன் 8ஆவது படிக்கும்போது படத்துக்கு கூட்டிட்டு போயிட்டான். எங்க ஊர்ல இருக்குற காளீஸ்வரி தியேட்டர் அப்போ ரொம்ப பேமஸ்.

அங்கதான் படங்கள பார்ப்போம். நான் இப்படி தொடர்ந்து படத்துக்கு போறது பிடிக்காத எங்க அப்பா, என்னை உள்ள விடக் கூடாதுன்னு தியேட்டர் ஆளுங்ககிட்ட சொல்லிட்டாரு. அதனால, நான் உள்ள போகாம, வெளியில இருக்குற பாறைல படுத்துட்டு வசனத்த மட்டும் கேட்டுகிட்டே இருப்பேன்.

அதே தியேட்டர்ல, 10ஆவது முடிச்ச அப்புறம் நான் டிக்கெட் கிழிக்க ஆரம்பிச்சேன். வீட்டுலயும், என் தீவிரத்தை பார்த்து எதுவும் சொல்லாம விட்டுட்டாங்க. எப்பவும் தியேட்டர்லயே இருக்குறது, ரீல் எடுக்க மதுரைக்கு போறதுன்னு என் நாட்கள் எல்லாம் தியேட்டர்லயே கழிய ஆரம்பிச்சது.

அப்போ ராஜபாளையத்துல சில தியேட்டர்கள் இருந்தன. ஆனா அங்க புதுப்படம் ரிலீஸ் ஆகாது. செகண்ட் ரிலீஸ்தான் பண்ணுவாங்க. அந்த காலக்கட்டத்துலதான் புது வசந்தம் ரிலீஸ் ஆச்சு. படம் பார்க்குறதுக்கு முந்தைய நாளே, சைக்கிள் எல்லாம் ரெடி பண்ணி வச்சிட்டேன். கையில 15 ரூபா எடுத்துட்டு, ராஜபாளையத்துல இருந்து சிவகாசிக்கு 36 கி.மீ. சைக்கிளில் போனேன். ஒரு காட்சி பார்த்து முடிச்சு, சாப்பிட கூட போகாம, அடுத்த காட்சி பார்க்க போயிட்டேன்.

இப்படியே இருந்த காசை வெச்சி, அந்த படத்த மூனு காட்சி பார்த்துட்டு ராத்திரி வெளிய வந்தா, கையில ஒரு ரூபாதான் இருந்தது. பசி வயித்த கிள்ளுது. ஆனா அதையெல்லாம் மறந்துட்டு, அந்த படம் பார்த்த சந்தோசத்தோடவே வீட்டுக்கு மறுபடி சைக்கிள்ல 36 கி.மீ. தூரம் போனேன்.

இப்ப நெனச்சா கூட, நம்மளா அப்படி இருந்ததுன்னு ஆச்சரியமாக இருக்கு. சமீபத்துல ஊருக்கு போனப்ப கூட காளீஸ்வரி தியேட்டரைப் பார்த்தேன். இப்போ அது பாழடைஞ்சு போய் பயன்பாடு இல்லாம இருக்குறது, ரொம்பவே கஷ்டமா இருந்துச்சு. எனக்கு சினிமாவை கொடுத்த அந்த தியேட்டருக்குள்ள போய், கொஞ்ச நேரம் அமைதியா உட்கார்ந்து இருந்தேன்” என தனது நினைவுகளை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார் சமுத்திரகனி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet