Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

நாளை வெளியாகிறது தர்பார் – ரஜினியின் போலீஸ் முன்னோட்டம்..!

0 Comments

Published on: Wednesday, January 8th, 2020 at 10:05 PM

ரஜினிகாந்தின் தர்பார் படத்திற்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். இதற்கு முன்பு அவர் காவல்துறை கதாபாத்திரத்தில் நடித்த திரைப்படங்களைப் பார்க்கலாம்.

முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, யோகிபாபு ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள தர்பார் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாண்டியன் திரைப்படத்தை அடுத்து 27 ஆண்டுகள் கழித்து ரஜினிகாந்த் காவல்துறை அதிகாரியாக ஆதித்ய அருணாச்சலம் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்ததிரைப்படம், மூன்று முகம் திரைப்படத்தில் இடம்பெற்ற அலெக்ஸ் பாண்டியன் கதாபாத்திரத்தை காட்டிலும் ரசிகர்களை கவரும் என படக்குழு தெரிவித்திருப்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

அனிருத் இசையில் சும்மா கிழி உள்ளிட்ட பாடல்கள் குழந்தைகள் வரை பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளன. தமிழகத்தில் மட்டும் ஏறத்தாழ 1000 திரைகளில் வெளியாகும் தர்பார் திரைப்படம், இந்தியா முழுக்க நான்காயிரம் திரைகளிலும், உலகம் முழுக்க 7,000 திரைகளிலும் வெளியாகவுள்ளது.

தர்பார் திரைப்படத்தை உற்சாகமாக கொண்டாடும் வண்ணம் இந்தியா முழுக்க ரஜினி ரசிகர்கள் தயாராகி வருகின்றனர். கேரள மாநிலத்தில் ரஜினி போல வேடமிட்டு ஊர்வலம் நடத்திய ரசிகர்கள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

சேலத்தில் ஹெலிகாப்டரில் ரஜினியின் கட் அவுட்டிற்கு மலர்தூவ ரஜினி ரசிகர்கள் திட்டமிட்ட நிலையில் இதற்கு அனுமதி கிடைக்காததால் வேறு வகைகளில் கொண்டாட்டங்களில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். 2020ம் ஆண்டின் முதல் பெரிய திரைப்படம் என்பதாலும், போட்டிக்கு வேறு திரைப்படம் வெளியாகாததாலும் தர்பார் திரைப்படத்தையொட்டி திரையரங்குகள் திருவிழா கோலம் காண காத்திருக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet