Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

ரசிகர்கள் இல்லாமல் கிரிக்கெட் – விராட் கோலி என்ன சொல்கிறார்?!

0 Comments

Published on: Saturday, May 9th, 2020 at 9:37 PM

ரசிகர்கள் இல்லாமல் கிரிக்கெட் – விராட் கோலி என்ன சொல்கிறார்?!: cricket matches without fans

ரசிகர்கள் இல்லாமல் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பாட்டால் மேஜிக் தருணங்கள் காணாமல் போகும் என இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவி வருவதால், பொதுமக்கள் ஒரே இடத்தில் கூடக் கூடாது என வலியுறுத்தப்படுகிறது. இதனால், முக்கிய அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிகளை ரசிகர்கள் இல்லாத மைதானத்தில் நடத்து ஐசிசி  திட்டமிட்டுள்ளது.

ரசிகர்கள் யாரும் மைதானத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பதால், முக்கிய கிரிக்கெட்  போட்டிகளை ரசிகர்கள் வீட்டிலிருந்தே பார்க்க வேண்டும்.

இந்நிலையில், கிரிக்கெட் கனக்டெட் என்ற நிகழ்ச்சியில் பேசிய விராட் கோலி, தற்போதைய சூழலில் ரசிகர்கள் இல்லாமல் போட்டிகளை நடத்துவது சாத்தியம் தான் என்றும், இதனை வீரர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள் என தெரியவில்லை என்றும் கூறினார்.

தன்னை போன்ற வீரர்கள் பலருக்கும் ரசிகர்களின் மத்தியிலே கிரிக்கெட் விளையாடி பழகிவிட்டதாக தெரிவித்த விராட் கோலி, அது ஒரு அலாதியான இன்பம் என்றார். கூச்சல், உற்சாகம், பதைபதைப்பு போன்ற உணர்வுகள் எதுவும் ரசிகர்கள் இல்லாத மைதானத்தில் கிடைக்காது என்றும் விராட் கோலி குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet