Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

கொரோனா மருந்து ரெடி… மனிதர்கள் மீது நடத்தப்பட்ட சோதனை வெற்றி…

0 Comments

Published on: Saturday, July 18th, 2020 at 10:56 PM

கொரோனா மருந்து ரெடிமனிதர்கள் மீது நடத்தப்பட்ட சோதனை வெற்றி

கொரோனா தடுப்பு மருந்தாக இந்தியாவில் உருவாக்கப்பட்ட கோவாக்சின் வெற்றிகரமாக மனிதர்கள் மீது சோதனை செய்யப்பட்டதால், விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகம் முழுவதும் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வரும் நிலையில் தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் பணிகளை அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் முடுக்கி விட்டுள்ளன. இந்தச் சூழலில், மருந்து ஏற்றுமதியில் முன்னனணியில் உள்ள இந்தியாவும் சொந்த நாட்டிலேயே தடுப்பு மருந்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டது.

இந்த சூழலில் ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனமும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகமும் இணைந்து கோவாக்சின் என்ற மருந்தை உருவாக்கினர்இதனை மனிதர்கள் மீது பரிசோதிக்க கடந்த ஜூன் மாதம் இந்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு நிறுவனம்  அனுமதியளித்த நிலையில், நாடு முழுக்க 13 இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வந்தன.

இந்த சூழலில் ஹரியானாவின் ரோத்தக்கில் உள்ள பி..ஜி. மருத்துவமனையில் கோவாக்சின் தடுப்பு மருந்து மனிதர்கள் மீது வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டதுஇதற்காக சுகாதார பரிசோதனைகளுக்கு பின் எட்டு  தன்னார்வலர்கள் தேர்ந்தெடுத்து, அதிலிருந்து 3 பேருக்கு மட்டும் மருந்து செலுத்தப்பட்டது.

கோவாக்சின் மருந்தை 3 பேரின் உடலும் ஏற்று கொண்டதாகவும், இது தொடர்பான முடிவை வெளியிடுவதற்கு முன்பு 2 மணி நேரம் அவர்களை கண்காணித்தபோது, எந்த எதிர்வினைகளும் ஏற்படவில்லை என இதில் ஈடுபட்ட பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேசமயம் அடுத்த 48 மணி நேரம் வரை அவர்கள் கண்காணிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை உறுதிப்படுத்தியுள்ள ஹரியானா சுகாதாரத்துறை அமைச்சர் அனில் விஜ், 3 பேரும் தடுப்பூசியை ஏற்று கொண்டதாகவும், எந்த பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet