Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

அமித்ஷாவுக்கு கொரோனா உறுதி… ராமர் கோயில் விழாவில் பங்கேற்பதில் சிக்கல்…

0 Comments

Published on: Sunday, August 2nd, 2020 at 10:03 PM

அமித்ஷாவுக்கு கொரோனா உறுதிராமர் கோயில் விழாவில் பங்கேற்பதில் சிக்கல்

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதால், வரும் 5ஆம் தேதி நடைபெறவுள்ள அயோத்தி ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதேபோல், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சரான அமித் ஷா, பல்வேறு துறை அமைச்சர்கள், அதிகாரிகளுடன் அடிக்கடி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக, அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தனக்கு எவ்வித அறிகுறியும் இல்லாத நிலையில், மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் பதிவிட்டுள்ளார்.

இது பாஜக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், கடந்த சில நாட்களில் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களும் கொரோனா சோதனை செய்து கொள்ளுமாறு அமித்ஷா அறிவுறுத்தியுள்ளார். அமித் ஷாவுக்கு கொரோனா உறுதியாகி இருப்பதால், வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி அயோத்தியில் நடைபெறவுள்ள ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவில் அவர் பங்கேற்பதில் சிக்கல் உருவாகியுள்ளது.

இதேபோல், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கும் அறிகுறி ஏதும் இல்லாததால், ஆளுநர் மாளிகையிலேயே அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet