Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

நடந்து செல்லும் பெண்களின் பின்புறத்தை தட்டும் இளைஞர் – தனக்கு போதை என வாக்குமூலம்..!

1 Comments

Published on: Thursday, January 23rd, 2020 at 7:08 PM

சென்னையை அடுத்த நங்கநல்லூர் டி.என். ஜி. ஓ., காலனி 7வது தெருவில் இளம் பெண் ஒருவர் நடந்து சென்றுக் கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர் திடீரென அந்த இளம்பெண்ணின் பின்புறத்தை தட்டி அநாகரீகமாக நடந்துக் கொண்டார்.

அந்த பெண் கூச்சலிட, அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் இளைஞர் மோட்டார் சைக்கிளில் வேகமாக தப்பிச் சென்றுவிட்டார். மீண்டும், அதே பகுதியில் வேறு ஒரு பெண்ணின் பின்புறத்தை அதே இளைஞர் தட்டும் போது அப்பகுதியினர் மடக்கி பிடித்து பழவந்தாங்கல் போலீசில் ஒப்படைத்தனர்.

இது தொடர்பாக பழவந்தாங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சென்னையை அடுத்த மடிப்பாக்கம் பெரியார்நகர் விரிவை சேர்ந்த சதீஷ்குமார் (30). தனியார் கம்பியூட்டர் நிறுவனத்தில் பணியாற்றி வரும் இவருக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது.

நங்கநல்லூர், மடிப்பாக்கம் பகுதிகளில் மோட்டார் சைக்கிளில் செல்லும் போது சாலையில் நடந்து செல்லும் பெண்களின் பின்புறத்தை தட்டுவதை வழக்கமாக கொண்டிருந்திருப்பதாக தெரியவந்தது. இதுதான் தனக்கு போதை தருவதாக கூறிய சதீஷ்குமார், பல பெண்களிடம் இந்த முறையில் அநாகரீகமாக நடந்துக் கொண்டதும் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து சதீஷ்குமாரை பழவந்தாங்கல் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1COMMENTS