0 Comments
Published on: Monday, July 20th, 2020 at 10:05 PM
இந்திய அளவில் விஜய் முதலிடம்… ரஜினி 3ஆம் இடமா? – உண்மை இதுதான்…
டி.ஆர்.பி. ரேட்டிங்கில் முதலிடத்தில் விஜய் இருப்பதாக அண்மையில் தகவல் வெளியான நிலையில், அது பொய்யானது என பார்க் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் அதிகம் பேரால் பார்க்கப்பட்டு, அதிக புள்ளிகளைப் பெறும் நிகழ்ச்சி, எந்த சேனலில் எந்த நிகழ்ச்சியை அதிகம் பேர் பார்க்கின்றனர் என்பதையெல்லாம் கணக்கிட்டு ஒவ்வொரு வாரமும் முடிவுகளை அறிவித்து வருகிறது BARC நிறுவனம்.
இந்நிலையில், கொரோனா ஊரடங்கில் நாடு முழுவதும் திரையரங்குகள் மூடப்பட்டு, பெரும்பாலான மக்கள் வீடுகளிலேயே இருப்பதால் பொழுதுபோக்கு தொலைக்காட்சிகள் போட்டிப்போட்டு கொண்டு முன்னணி நடிகர்களின் படங்களை ஒளிபரப்பி வருகின்றன. அதில், ஊரடங்கு காலத்தில் அதிகம் பேரால் பார்க்கப்பட்டது விஜய் படம் என்றும், 117.9 மில்லியன் பார்வைகளை விஜய் பெற்றிருப்பதாகவும் தகவல் வெளியானது.
மேலும் அதில் இரண்டாவது இடத்தில் ராகவா லாரன்ஸ் 76.2 மில்லியன், ரஜினி 68.5 மில்லியன், அக்ஷய்குமார் 58.8 மில்லியன், பிரபாஸ் 56.9 மில்லியன் என புள்ளி விவரங்கள் இடம்பெற்று இருந்தன. இந்த புள்ளி விவரம் போலியானது என பார்க் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், தவறான தகவலை விளம்பரப்படுத்த தங்கள் நிறுவனத்தின் லோகோவை தவறாக பயன்படுத்தியிருப்பதாகவும் விளக்கம் அளித்துள்ளது.
Kindly note, we would like to intercept this, as this data isn't published or shared by BARC India. Only consider data published by BARC India's official accounts and website as authentic.
— BARCIndia (@BARCIndia) July 20, 2020
மேலும், தங்களது அதிகாரப்பூர்வ வலைதளம் மற்றும் சமூகவலைதள கணக்குகளில் வெளியாகும் தகவல்கள் மட்டுமே உண்மை என்றும் பார்க் நிறுவனம் தெரிவித்துள்ளது.
No comments yet