Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

கோழி இறைச்சியில் கொரோனா… மீண்டும் கதிகலங்கிப் போயிருக்கும் சீனா..!

0 Comments

Published on: Thursday, August 13th, 2020 at 11:16 PM

கோழி இறைச்சியில் கொரோனாமீண்டும் கதிகலங்கிப் போயிருக்கும் சீனா..!

பிரேசிலில் இருந்து சீனாவுக்கு இறக்குமதி செய்யப்பட்ட கோழி இறைச்சியில் கொரோனா தொற்று இருந்ததாக சீனா கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் ஊஹானில் உள்ள இறைச்சி சந்தையில் இருந்து புறப்பட்டு, சீனா முழுவதும் பரவி, பின்னர் உலகம் முழுவதும் கோரத்தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், சீனாவின் தென்பகுதியான ஷென்ஷென் நகருக்கு பதப்படுத்தப்பட்ட கோழி இறைச்சி அண்மையில் பிரேசிலில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது.

அப்போது உணவின் தரம் மற்றும் கோழி இறைச்சியில் கொரோனா உள்ளதா என அதிகாரிகள் மாதிரிகளை எடுத்து சோதித்தனர். அதில் குறிப்பிட்ட ஒரு பார்சலில் வந்த இறைச்சியில் கொரோனா வைரஸ் இருந்தது உறுதியானது. இதுகுறித்து, பிரேசில் அதிகாரிகள் கருத்து கூற மறுத்துள்ளனர். இதேபோல் சீனாவிற்கு ஈக்வடார் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இறால்களிலும் கொரோனா வைரஸ் இருந்ததாக ஷென் ஷென் மாகாண நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஏற்கெனவே கொரோனா வைரஸ் பாதிப்பால் கதிகலங்கி, ஒருவழியாக மீண்டு வந்துள்ள சீனா, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இறைச்சிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என சீன மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet