Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

கள்ளக்காதலியை சந்திக்க இ-பாஸ் எடுத்த இளைஞர்… ஓட ஓட விரட்டி கொல்லப்பட்ட கொடூரம்..!

0 Comments

Published on: Saturday, August 22nd, 2020 at 10:25 AM

கள்ளக்காதலியை சந்திக்க பாஸ் எடுத்த இளைஞர்ஓட ஓட விரட்டி கொல்லப்பட்ட கொடூரம்..!

சென்னையில் இருந்து கள்ளக்காதலியை சந்திக்க பாஸ் எடுத்துக் கொண்டு திண்டிவனம் சென்ற இளைஞர் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம், கிடங்கல் பகுதியைச் சேர்ந்தவர் ரகுவரன். இவர் அதே பகுதியைச் சேர்ந்த மகாலட்சுமியை 10 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 9 மற்றும் 8 வயதில் இரு குழந்தைகள் உள்ளனர். சென்னையில் குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில்மகாலட்சுமி தியாகராயநகர் பகுதியில் உள்ள ஒரு பிரபல துணிக்கடையில் பணிபுரிந்து வந்தார்.

அப்போது சென்னை திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த 27 வயதான விக்னேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் ஒன்றாக கடையில் வேலை பார்த்ததால், கணவருக்கு சந்தேகம் வராத வகையில் அவ்வப்போது தனிமையில் இருந்து வந்துள்ளனர். கொரோனா ஊரடங்கால் சென்னையில் பெரிய துணிக்கடைகள் மூடப்பட்டதோடு, ரகுவரனுக்கும் வேலையில்லாததால், குடும்பத்துடன் சொந்த ஊரான திண்டிவனத்திற்கு சென்றனர்.

இதனால், விக்னேசை சந்திக்க முடியாமல் தவித்த மகாலட்சுமிகணவருக்கு தெரியாமல் போனில் மட்டும் பேசி வந்துள்ளார். பாஸ் தளர்வு அறிவிக்கப்பட்ட நிலையில், புதன்கிழமை சென்னையிலிருந்து விக்னேசை திண்டிவனத்திற்கு வர வைத்துள்ளார். கணவர் வெளியில் செல்வதை தெரிந்து கொண்ட மகாலட்சுமி, விக்னேசை நண்பகலில் வீட்டிற்கே வர சொல்லி உள்ளார். குழந்தைகளை அருகில் உள்ள உறவினர் வீட்டில் விட்டுவிட்டு, இருவரும் வீட்டில் தனிமையில் இருந்துள்ளனர்.

வெளியில் சென்ற கணவர் ரகுவரன் திடீரென வீட்டிற்கு வர, மனைவி வேறொருவருடன் தனிமையில் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். கோபத்தில் ரகுவரன் மனைவியை சரமாரியாக அடித்துள்ளார். அதை விக்னேஷ் தடுக்கச் சென்றுள்ளார். இதனால் மேலும் ஆத்திரமடைந்த ரகுவரன், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து விக்னேசின் முதுகில் குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த விக்னேஷ் தப்பி செல்ல முயன்று வீட்டில் இருந்து வெளியே ஓடியுள்ளார்.

அவரை விரட்டிச் சென்ற ரகுவரன் மீண்டும் இடுப்பில் குத்தியதில், ரத்த வெள்ளத்தில் சரிந்து, சம்பவ இடத்திலேயே விக்னேஷ் உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், விக்னேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலை செய்த ரகுவரனை கைது செய்த போலீசார், விக்னேஷை திண்டிவனம் வர வைத்த மகாலட்சுமியிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையில் இருந்து திண்டிவனம் சென்று கள்ளக்காதலி உடன் தனிமையில் இருந்த இளைஞரை, கணவர் ஓட ஓட விரட்டி கொலை செய்த சம்பவம் திண்டிவனம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet