0 Comments
Published on: Monday, August 10th, 2020 at 10:23 PM
கணவர் இல்லாத நேரத்தில் விபச்சாரம்… கொள்ளையர்களால் சிக்கிக் கொண்ட மனைவி…
வாடிக்கையாளர்களை வீட்டிற்கே வரவழைத்து மனைவி விபச்சாரத்தில் ஈடுபட்டதை அறிந்து, அவரது கணவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். வீட்டில் நடைபெற்ற கொள்ளையால் மனைவியின் அந்தரங்க செயல் கணவருக்கு தெரியவந்திருப்பதுதான் இதில் வேடிக்கை…
சென்னை செங்குன்றம் அருகே பாடியநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் குமார். இவர் கடந்த வாரம் வீட்டில் இருந்தபோது, அவரது வீட்டிற்குள் நுழைந்த 10 பேர் கொண்ட கும்பல் கத்தி முனையில் மிரட்டி நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இது குறித்து செங்குன்றம் காவல் நிலையத்தில் குமார் புகாரளித்தார். இதையடுத்து விசாரணை நடத்திய போலீசார், 5 இருசக்கர வாகனத்தில் 10 பேர் வந்தது தெரியவந்ததை, சிசிடிவி காட்சிகளின் மூலம் உறுதி செய்தனர்.
கொள்ளையை அரங்கேற்றிவிட்டு, செங்குன்றத்தில் புறப்பட்ட இருசக்கர வாகனங்கள் தண்டையார்பேட்டை வரை சென்றது தெரியவந்தது. கொள்ளையில் ஈடுபட்டது வியாசர்பாடியைச் சேர்ந்த 32 வயதான ரகு தலைமையிலான கும்பல் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. செல்போன் சிக்னல் மூலம் அவர்கள் பதுங்கி இருந்த இடத்தை சுற்றி வளைத்து போலீசார் கைது செய்தனர். கைதானவர்களிடம் குமார் வீட்டில் நகை இருப்பது எப்படி தெரியும், குமார் வீட்டை தேர்ந்தெடுத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது ஏன் என விசாரித்தனர். அப்போது அவர்கள் திடுக்கிடும் தகவலை கொள்ளையர்கள் தெரிவித்துள்ளனர்.
குமாரின் மனைவி, கணவருக்கு தெரியாமல் வீட்டில் வைத்தே ரகசியமாக விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். லாரி ஓட்டுநரான குமார் வெளியூர் செல்லும் நேரத்தில் வாடிக்கையாளர்களை வீட்டுக்கு வர வைத்து, வீட்டின் மாடியில் உள்ள கூரை வீட்டில் விபச்சாரம் செய்துள்ளார். இதற்காக சில பெண்களை உறவினர்கள்போல் வீட்டுக்கு அழைத்து, அக்கம்பக்கத்தினருக்கு தெரியாமல் ரகசியமாக செய்து வந்துள்ளார். அங்கு வாடிக்கையாளரான ரகுவுக்கு, குமாரின் மனைவி விபச்சாரம் செய்து அதிக அளவில் பணம் வைத்திருப்பது தெரிய வந்துள்ளது.
அங்கு கொள்ளையடிக்க திட்டமிட்ட ரகு, கூட்டாளிகளுடன் சென்று நகை, பணத்தை பறித்துக் கொண்டு தப்பியுள்ளான். குமாரின் மனைவி சட்டவிரோத செயலில் ஈடுபடுவதால், போலீசில் புகார் அளிக்க மாட்டார் என நினைத்து செய்ததாகவும், இந்த விவகாரம் எதுவும் தெரியாத குமார் போலீசில் புகார் அளித்ததால் தாங்கள் சிக்கிக்கொண்டதாகவும் கூறியுள்ளான். இதையடுத்து, ரகு வீட்டில் கொள்ளையடித்த பொருட்களை பறிமுதல் செய்துள்ள போலீசார், ரகுவின் மனைவி மீது வழக்குப் பதிவு செய்வது குறித்தும் ஆலோசித்து வருகின்றனராம்..!
No comments yet