Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

காமெடி நடிகர் எஸ்.வி.சேகர் மீது வழக்குப் பதிவு – கைதாகவும் வாய்ப்பு… ஏன்?

0 Comments

Published on: Thursday, August 13th, 2020 at 11:30 PM

காமெடி நடிகர் எஸ்.வி.சேகர் மீது வழக்குப் பதிவுகைதாகவும் வாய்ப்பு... ஏன்?

தேசியக்கொடியையும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும் அவமதித்த புகாரில் நடிகர் எஸ்.வி.சேகர் மீது இரண்டு பிரிவுகளில் சென்னை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தேசியக் கொடிக்கான விளக்கத்தை கடந்த சில நாட்களுக்கு முன்பு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார். இந்நிலையில், பாஜக பிரமுகரும் காமெடி நடிகருமான எஸ்.வி.சேகர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோவில், தேசியக் கொடியை மத அடையாளங்களுடன் ஒப்பிட்டு பேசியிருந்தார்.

அவரது பேச்சு சர்ச்சையைக் கிளப்பியதையடுத்து, எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னையைச் சேர்ந்த ராஜரத்தினம் என்பவர், காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தர். முதலமைச்சரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் பேசியுள்ளதாக அந்த புகாரில் குற்றம்சாட்டப்பட்டதுஇதையடுத்து, தேசிய சின்னங்கள் அவமதிப்பதை தடுக்கும் சட்டத்தின் கீழ் 2 பிரிவுகளில் எஸ்.வி.சேகருக்கு எதிராக சென்னை மத்தியக் குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

எஸ்.வி.சேகரை கைது செய்ய வேண்டும் என்ற ஹேஷ்டேக் நேற்று ட்டுவீட்டரில் டிரெண்டிங் ஆன நிலையில், இன்று அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் கைது செய்யப்படவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet