Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

அண்ணன் வீட்டில் இல்லை… சிக்கிக் கொண்ட அப்பாவி தம்பி… எல்லாம் கள்ளக்காதல் படுத்தும்பாடு…

0 Comments

Published on: Monday, July 13th, 2020 at 9:50 AM

அண்ணன் வீட்டில் இல்லை… சிக்கிக் கொண்ட அப்பாவி தம்பி… எல்லாம் கள்ளக்காதல் படுத்தும்பாடு…

கள்ளக்காதலில் ஈடுபட்ட அண்ணனைத் தேடி வந்த கும்பல், அவரது சகோதரரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ள கொடூர சம்பவம் நடந்துள்ளது.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள மேல எர்ரம்மாள்புரத்தைச் சேர்ந்தவர் 21 வயதான இசக்கிமுத்து. கேரளாவில் ஓட்டலில் வேலை செய்து வந்த இவர், கொரோனா ஊரடங்கு காரணமாக சொந்த கிராமத்திற்கு திரும்பி விட்டார். கடந்த 10ஆம் தேதி இரவு நேரத்தில் வீட்டருகே உள்ள கோயிலில் நின்று கொண்டிருந்தார் இசக்கிமுத்து. அப்போது அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல் இசக்கி முத்துவை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடியது.

ரத்த வெள்ளத்தில் விழுந்த இசக்கிமுத்துவை அக்கம்பக்கத்தினர் மீட்டு, அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே இசக்கி முத்து உயிரிழந்தார். இதுதொடர்பாக கல்லிடைக்குறிச்சி காவல்துறையினர் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர்.

கொலை தொடர்பாக, மகேந்திரன் உள்ளிட்ட 4 பேரைப் போலீசார் பிடித்து விசாரித்தபோது பகீர் தகவல்கள் வெளியாகின. இசக்கிமுத்துவின் அண்ணன் பாலசுப்பிரமணியனுக்கும் அதே ஊரைச் சேர்ந்த 35 வயதான மகேந்திரன் என்ற கூலித் தொழிலாளியின் மனைவிக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.

இதையறிந்த மகேந்திரன் இருவரையும் கண்டித்துள்ளார். ஆனாலும் இருவரும் கள்ளக்காதலை கைவிடாததால், பாலசுப்பிரமணியனை தீர்த்துக் கட்டினால்தான் பிரச்சனை தீரும் என்ற முடிவுக்கு வந்தார் மகேந்திரன். அதனால் தனது நண்பர்களான இளங்கோ, முருகன், ராஜா ஆகியோருடன் சேர்ந்து பாலசுப்பிரமணியன் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

மகேந்திரனால் தனது உயிருக்கு ஆபத்து உள்ளது என்பதை ஏற்கனவே அறிந்த பாலசுப்பிரமணியன் கடந்த சில நாட்களாகவே வீட்டிற்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது. பாலசுப்பிரமணியன் வீட்டில் இல்லை என்று தெரிந்ததும், வெறுமனே திரும்பிச் செல்லக் கூடாது என முடிவெடுத்த அந்த கும்பல், வீட்டருகே நின்று கொண்டிருந்த இசக்கி முத்துவை கொலை செய்துள்ளது.

இதையடுத்து 4 பேர் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்த போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர். அண்ணனின் கள்ளக்காதலால், அப்பாவி தம்பி படுகொலை செய்யப்பட்ட சம்பவம், கல்லிடைக்குறிச்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet