Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

அக்கா வீட்டின் மீது வெடிகுண்டு வீசிய தம்பி – கவ்விச் சென்ற நாய் தலை சிதறி பலியான பரிதாபம்…

0 Comments

Published on: Thursday, May 21st, 2020 at 6:45 PM

அக்கா வீட்டின் மீது வெடிகுண்டு வீசிய தம்பி – கவ்விச் சென்ற நாய் தலை சிதறி பலியான பரிதாபம்…

மதுரையில் குடிபோதையில் வசை பாடுவதை தட்டிக்கேட்ட அக்கா வீட்டின் மீது தம்பி வீசிய நாட்டு வெடிகுண்டுகளை கவ்விச் சென்ற நாய், தலை சிதறி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே ராமகவுண்டன்பட்டியைச் சேர்ந்தவர் செல்வராணி. இவரது தம்பி முருகன், அதே ஊரைச் சேர்ந்த சின்னத்துரை என்பவருடன் சேர்ந்து மது குடித்துவிட்டு, தேவையில்லாமல் தகராறில் ஈடுபடுவதை வாடிக்கையாக கொண்டவர். மேலும், மது குடித்த பின் அக்கா செல்வராணி வீட்டிற்கு வந்து தகராறில் ஈடுபடுவதையும் வழக்கமாக கொண்டிருந்தார்.

ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டதால், இவர்களது தொல்லை இல்லாமல் இருந்த நிலையில், மீண்டும் டாஸ்மாக் கடை திறந்த பின் முருகன், சின்னத்துரையுடன் சேர்ந்து மது குடித்துவிட்டு, மீண்டும் சகோதரி வீட்டில் தகராறு செய்வதை தொடர ஆரம்பித்தார். தொடர்ந்து தொல்லை கொடுத்ததால், கோபமடைந்த செல்வராணி இருவரையும் திட்டி எச்சரித்துள்ளார்.

ஆத்திரமடைந்த முருகன், இன்று காலை தனது வீட்டில் இருந்த நான்கு நாட்டு வெடிகுண்டுகளை எடுத்து வந்து, தன் அக்கா வீட்டின் மீது வீசியுள்ளார். ஒரு குண்டு வெடித்து சிதறிய நிலையில், மூன்று வெடிகுண்டுகள் வெடிக்காமல் வீட்டருகே விழுந்துள்ளன. அதில் ஒரு நாட்டு வெடிகுண்டை செல்வராணியின் நாய் கடித்த போது குண்டு வெடித்து தலை சிதறி நாய் சம்பவ இடத்திலேயே பலியானது.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், முருகனை கைது செய்ததோடு,  இரண்டு நாட்டு வெடி குண்டுகளையும் பறிமுதல் செய்தனர். மேலும், முருகனுடன் சேர்ந்த தகராறில் ஈடுபட்டுவிட்டு தப்பியோடிய சின்னத்துரையை தேடி வருகின்றனர். அத்துடன், முருகனே நாட்டு வெடிகுண்டு தயாரித்தாரா? அல்லது அவருக்கு நாட்டு வெடிகுண்டு சப்ளை செய்தது யார்? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet