Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

கிணற்றில் இருந்து அடுத்தடுத்து எடுக்கப்பட்ட உடல்கள்… தெலுங்கானாவில் நிகழ்ந்த கோரம்…

0 Comments

Published on: Friday, May 22nd, 2020 at 9:42 PM

கிணற்றில் இருந்து அடுத்தடுத்து எடுக்கப்பட்ட உடல்கள்… தெலுங்கானாவில் நிகழ்ந்த கோரம்…

தெலங்கானாவில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 9 பேரின் உடல்கள் கிணற்றில் இருந்து அடுத்தடுத்து மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேற்குவங்கம், பீகார் உள்ளிட்ட வடமாநிலங்களை சேர்ந்த ஏராளமானோர் தெலங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் உள்ள கொர்ரிகொண்ட பகுதியில் இயங்கி வரும் கோணிப்பை தயாரிக்கும் தொழிற்சாலையில் தங்கி பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், நேற்று அங்கு உள்ள கிணற்றில் உடல்கள் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அப்பகுதிக்கு சென்ற தீயணைப்புத்துறையினர் மேற்குவங்கத்தை சேர்ந்த மசூத்அவரது மனைவி நிஷா மற்றும் 2 குழந்தைகளின் உடல்களை மீட்டனர். இதே போல் இன்று பீகாரை சேர்ந்த மூவரின் உடல்களும் மீட்கப்பட்டன. வேலையில்ல்லாமல் வறுமையில் வாடியதால் இவர்கள் அனைவரும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

இருப்பினும், தற்போது பெரும்பாலான புலம்பெயர் தொழிலாளர்கள் ஊருக்குச் செல்வதை பார்த்து, தாங்களும் ஊருக்குச் செல்ல வேண்டும் என கூறியதால், தொழிற்சாலை உரிமையாளர், இவர்களை கிணற்றில் தள்ளி கொலை செய்தாரா என்றும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet