Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

VIDEO: ’இனி பண்ண மாட்டோம்னு சொல்லுடா…’ அரசியல்வாதிகளால் ஆர் ஜே விக்னேஷ் கடத்தி மிரட்டப்பட்டாரா?

0 Comments

Published on: Monday, January 6th, 2020 at 5:42 PM

பிளாக் ஷீப் என்ற யூ டியூப் சேனல் மூலம் இன்றைய இளைஞர்களிடையே பிரலமடைந்த ஆர் ஜே விக்னேஷ், ஹிப் ஹாப் தமிழா நடித்த மீசையை முறுக்கு படத்தில் நகைச்சுவை நடிகராகவும் சினிமாவில் தடம் பதித்தார். ரேடியோ ஜாக்கியாக தனது வாழ்க்கையைத் தொடங்கிய விக்னேஷ், பிளாக் ஷீப் உடன் உனக்கென்னப்பா என்ற மற்றொரு யூடியூப் சேனலையும் நடத்தி வருகிறார்.

யூடியூப் சேனல்களில் பல நல்ல கருத்துகளை நகைச்சுவையாக கூறி வரும் இவரை, ஒரு கும்பல் கடத்தி மிரட்டி மன்னிப்பு கேட்க வைக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அந்த வீடியோவை, தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பாஜக மாநிலத் தலைவர் சி.டி.ஆர். நிர்மல்குமார், திமுகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கையும் டேக் செய்துள்ளார்.

அதாவது, திமுக கட்சியைச் சேர்ந்தவர்கள்தான், ஆர் ஜே விக்னேஷை கடத்தி மிரட்டினார்கள் என்ற ரீதியில், நிர்மல்குமார் அந்த வீடியோவை பகிர்ந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வரும் நிலையில், ஆர் ஜே விக்னேஷ் அந்த வீடியோ குறித்த உண்மையை கூறியுள்ளார்.

அரசியல்வாதிகள் மிரட்டுவதுபோல இருக்கும் அந்த வீடியோ, தங்கள் குழுவினரால் செய்யப்பட்ட ஃபிராங்க் வீடியோ என உண்மையை போட்டு உடைத்துள்ளார் ஆர் ஜே விக்னேஷ். இது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்டது என்றும் விளக்கம் அளித்துள்ள ஆர் ஜே விக்னேஷ், ஃபன் பண்றோம் குழுவுடன் இணைந்து எங்களது அலுவலகத்தில்தான் எடுத்தோம் என்றும் தெரிவித்துள்ளார்.

வீடியோவை நிர்மல்குமார் ட்விட்டரில் பதிவிட்டதும், அதை திமுகவுக்கு எதிராக பரப்பும் வேளையில் ஈடுபட்ட பாஜகவினர், ஆர் ஜே விக்னேஷ் அளித்த விளக்கத்திற்கு பிறகு, என்ன செய்வது என்று தெரியாமல் திருதிருவென முழித்துக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே, பாஜகவின் நிர்மல்குமாரை இணையதளவாசிகள் கலாய்த்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet