Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

பஜ்ஜி டேஸ்ட் இல்லைன்னு சொல்றியா? – இளைஞரை வெட்டிய வடமாநில இளைஞர்…!

0 Comments

Published on: Saturday, November 30th, 2019 at 2:58 PM

பஜ்ஜி சுவையாக இல்லை என்றுக் கூறியதால் இளைஞரை, கடை ஊழியர் கத்தியால் தலையில் வெட்டிய சம்பவம், சென்னையில் அரங்கேறியுள்ளது.

சென்னை வியாசர்பாடி எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஞானமணி. இவர் சென்னை சவுகார்பேட்டை பார்க் டவுன் கிருஷ்ண ஐயர் தெருவில் உள்ள கடை ஒன்றில் டெலிவரி பாயாக வேலை செய்து வருகிறார்.

13 ஆண்டுகளாக பார்க் டவுன் பகுதியில் வேலை பார்க்கும் ஞானமணி, வழக்கமாக வேலை முடிந்து வீட்டிற்கு செல்லும்போது சவுகார்பேட்டை கோவிந்தப்ப நாயக்கர் தெருவில் உள்ள அமரராம் என்பவருக்கு சொந்தமான கடைக்கு சென்று பஜ்ஜி சாப்பிடுவது வழக்கம்.

கடந்த செவ்வாய்க்கிழமையும் ஞானமணி வேலைகளை முடித்துவிட்டு, நண்பர் சீனிவாசனுடன் பஜ்ஜி சாப்பிட அமரராம் கடைக்கு சென்றுள்ளார். கடையில் வேலை பார்த்து வரும் பீகாரைச் சேர்ந்த அருண் என்பவர் பஜ்ஜியை கொடுத்துள்ளார். பஜ்ஜியை வாங்கி சாப்பிட்ட ஞானமணி, பஜ்ஜி வழக்கமான சுவையுடன் இல்லை எனக் கூறியுள்ளார் இதனால் ஆத்திரமடைந்த கடை ஊழியர் அருண், பஜ்ஜி அப்படித்தான் இருக்கும் என்று கூறி, இந்தியிலும் திட்டியுள்ளார்.

கோபமடைந்த ஞானமணி, கடை ஊழியர் அருணை அறைந்துள்ளார்.  இதையடுத்து கடை ஊழியர் அருண் தன் கையில் வைத்திருந்த வெங்காயம் வெட்டும் கத்தியால் ஞானமணியின் தலையில் வெட்டியுள்ளார். தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் வெளியேறியது. இதையடுத்து ஞானமணியை, அவரது நண்பரும், கடை உரிமையாளரும் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

பின்னர் புகாரின் பேரில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பூக்கடை போலீசார் அருணை காவல் நிலையம் அழைத்துச் சென்று தங்களது வழக்கமான பாணியில் விசாரித்தனர். சம்பவம் நடைபெற்ற இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளையும் கைப்பற்றினர்.

பஜ்ஜிக்காக கத்தியால் வெட்டினாரா என்பதை விட, வடமாநிலத்தவர்களின் கை தமிழகத்தில் எந்த அளவுக்கு ஓங்கி இருக்கிறது என்பதை பார்க்க வேண்டும். பிழைக்க வந்த மாநிலத்தில் இதுபோன்று செய்வதற்கு தைரியம் கொடுத்தது என்பது கவனிக்கத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet