0 Comments
Published on: Thursday, August 6th, 2020 at 11:00 PM
ஆட்டு ஈரலில் இவ்வளவு சத்தா? இனி விடாதீங்க… வெஜ் பிரியர்கள் படிக்காதீங்க…
ஆட்டிறைச்சியை நான்–வெஜ் பிரியர்கள் வெகுவாக விரும்புவார்கள். அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது, ஆட்டு ஈரலில் உள்ள சத்தைத் தான்.
நானெல்லாம் சுத்த சைவமாக்கும். சைவத்துல இல்லாத சத்தா, அசைவத்துல இருக்கு? என கேள்வி எழுப்பி, பட்டியல் போடுவோர், தயவு செய்து மேற்கொண்டு படிக்காதீர்கள். இது முழுக்க முழுக்க நான்–வெஜ் பிரியர்களுக்காக செய்தி.
பொதுவாக இறைச்சி பிரியர்கள் பலர் எலும்பில்லாத வகை இறைச்சியைத்தான் விரும்பி சாப்பிடுவார்கள். அதாவது போன்லெஸ். அதில் ருசி அதிகமாக இருந்தாலும், ஈரலைச் சாப்பிட்டால்தான் அதிக சத்து கிடைக்கும். காரணம் ஈரலில் உயிர்ச்சத்துகள் இருக்கின்றன.
ரத்த சோகையால் பாதிக்கப்பட்டோருக்கு பரிந்துரைக்கப்படும் போரிக் அமிலம், விட்டமின் பி12 ஆகியவையும் ஈரலில் அதிகம் உள்ளது. மிக மிக ஒல்லியான தேகம் உடையவர்கள் ஆட்டு ஈரலை வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்கும். அத்துடன் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.
கர்ப்பிணிகள் ஆட்டு ஈரலை சாப்பிட்டு வந்தால், கருவில் இருக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும். அதேபோல், கர்ப்பிணிகளுக்கு அதிக அளவில் சாப்பிட முடியாது. இவர்கள் குறைந்தளவு ஆட்டு ஈரலை சாப்பிட்டாலே, கருவில் இருக்கும் குழந்தைக்கு போதிய ஊட்டச்சத்து கிடைக்கும்.
அதேநேரத்தில் ஆட்டிறைச்சியில் கொழுப்புச் சத்து அதிகம் என்பதால், இதை சாப்பிடும்போது பூண்டையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஆரோக்கியமான முறையில் வீட்டிலேயே சமைத்து வாரத்தில் 4 நாட்கள் கூட ஈரலை சாப்பிடலாம்.
No comments yet