0 Comments
Published on: Monday, June 1st, 2020 at 9:07 PM
அழகு நிலையத்தில் நிர்வாணப் படம் எடுத்து மிரட்டல் – தொழில் அதிபர்களுடன் உல்லாசமாக இருக்குமாறு மிரட்டிய கணவன் – மனைவி..!
அழகு நிலையத்துக்கு வேலைக்கு வந்த இளம்பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டி, தொழில் அதிபர்களுடன் படுக்கையை பகிர்ந்துகொள்ளுமாறு தம்பதி மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் தாதகாபட்டி சீரங்கன் தெரு பகுதியில் வசித்து வருபவர்கள் லோகநாதன்-ரூபா தம்பதி. வீட்டிலேயே அழகு நிலையம் நடத்தி வரும் இவர்கள், கடந்த சில நாட்களுக்கு முன்பு, அதே பகுதியைச் சேர்ந்த லோகநாதனின் உறவுமுறையைச் சேர்ந்த இரு இளம்பெண்கள் உள்பட மூவர் வேலை கேட்டு சென்றனர்.
மூவரையும் வேலைக்குச் சேர்த்துக் கொண்ட லோகநாதன், அவரது மனைவி ரூபா, அதிக பணம் சம்பாதித்து பகட்டான வாழ்க்கை வாழ தங்களிடம் ஐடியா உள்ளதாகவும், அதற்கு மூவரும் கொஞ்சம் ‘அட்ஜஸ்ட்’ செய்து கொண்டால் போதும் என்றும் கூறியுள்ளனர்.
மேலும், பெரிய தொழிலதிபர்கள் தங்களிடம் வாடிக்கையாளர்களாக உள்ளதாகவும், தாங்கள் சொல்லும்போது அவர்களுடன் உல்லாசமாக இருந்தால் அதிக பணம் கிடைக்கும் எனக் கூறி மூவரையும் பாலியல் தொழிலுக்கு அழைத்துள்ளனர்.
இதற்கு மூவரும் மறுக்கவே, அவர்களை வீட்டிற்குள் அடைத்து வைத்து, கத்தியை காட்டி மிரட்டி நிர்வாணப்படுத்தி ஆபாசமாக படம் எடுத்துள்ளனர். வீடியோ பதிவு செய்யும் போது, தம்பதியர் மட்டுமல்லாமல் அவர்களுக்கு உடந்தையாக லோகநாதனின் நண்பர்கள் சிலர் இருந்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த மூன்று பெண்களும் சேலம் நகர அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், லோகநாதன் மற்றும் அவனது நண்பர்கள் பிரதீப், சிவா ஆகிய மூவரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த செல்போன்களை பறிமுதல் செய்து ஆய்வு நடத்தியபோது போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
அந்த செல்போனில், இந்த மூன்று பெண்கள் மட்டுமல்லாமல், மேலும் பல இளம்பெண்களின் ஆபாச படம் இருப்பது தெரியவந்தது. இதனால் அவர்களிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். விசாரணையில், லோகநாதன் மற்றும் ரூபா தம்பதியர், ஆண்டுக்கு ஒரு முறை, தாங்கள் வசிக்கும் பகுதியை மாற்றி கொண்டே இருந்துள்ளனர்.
இது போன்று அழகு நிலையம் நடத்தி வருவதாக கூறி, அங்கு வேலைக்கு வரும் இளம்பெண்களை ஆபாச படமெடுத்து அவர்களை மிரட்டி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளனர். அந்த பெண்கள் தொழில் அதிபர்களுடன் ஒன்றாக இருக்கும்போது அதை ரகசியமாக வீடியோ பதிவு செய்தும் உள்ளனர்.
இந்த வீடியோ பதிவை வைத்து, தொழில் அதிர்பர்களை மிரட்டியும் பணம் பறித்துள்ளனர். இதையடுத்து, கைது செய்யப்பட்ட லோகநாதன் மற்றும் அவனது நண்பர்கள் சிவா, பிரதிப் ஆகியோரை நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய லோகநாதனின் மனைவி ரூபா மற்றும் உடைந்தாக இருந்த லோகநாதனின் தந்தை ரகுராம் உள்ளிட்ட மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர். இதனிடையே லோகநாதன் கைது செய்யப்பட்டு இருப்பதை அறிந்த கணவரால் கைவிடப்பட்ட இளம்பெண் உள்ளிட இருவர் மகளிர் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளனர்.
அதில் லோகநாதன் மற்றும் அவரது மனைவி ரூபா இருவரும் சேர்ந்து தங்களை ஆபாச படம் எடுத்து மிரட்டி வருவதாகவும், பாலியல் தொழிலில் ஈடுபட கட்டாயபடுத்தி வருவதாகவும் கூறி இருந்தனர். இதனை தொடர்ந்து அந்த புகாரின் அடிப்படையில் லோகநாதன் உள்ளிட்டவர்கள் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments yet