Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

சாலையில் சென்றவர்களை விரட்டிய பேய்கள்… இளைஞர்களை பிடித்து கும்மாங்குத்து குத்திய போலீசார்..!

0 Comments

Published on: Tuesday, November 12th, 2019 at 9:54 PM

யூ டியூப் சேனலை பிரபலப்படுத்துவதற்காக பேய் வேடம் போட்டு சாலையில் சென்றவர்களை பயமுறுத்திய கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

பெங்களூரைச் சேர்ந்த சில இளைஞர்கள் இணைந்து, கடந்த 2017ஆம் ஆண்டு கூகி பீடியா என்ற யூ டியூப் சேனலை தொடங்கினர். அதில் முழுக்க முழுக்க பிராங் வகை வீடியோக்களை மட்டுமே  வெளியிட்டு வருகின்றனர். உலக அளவில் பிராங் வீடியோக்களுக்கு யூ டியூப் பார்வையாளர்களிடம் பெரிய வரவேற்பு இருந்தும், கூக்கி பீடியா யூ டியூப் சேனலுக்கு பெரிய அளவில் வரவேற்பு இல்லை.

2 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்ட அந்த சேனலுக்கும் தற்போது வரை மிகவும் குறைந்த அளவிலேயே சப்ஸ்கிரைபர்கள் எனப்படும் சந்தாதாரர்கள் இருப்பதால், சேனலை பிரபலபடுத்த நினைத்த அந்த இளைஞர்கள் என்ன செய்யலாம் என பல வழிகளில் யோசித்தனர். இதற்கு யூ டியூப்பிலேயே ஆராயத் தொடங்கினர். அப்போது, ஆஸ்திரேலியாவில் பேய் வேடமிட்டு பொதுமக்களை மிரட்டும் யூடியூப் காட்சி பிரபலமாக இருந்தது தெரிய வந்தது. அதை உலகம் முழுவதும் உள்ள மக்கள் ரசித்து இருப்பதும் தெரியவந்தது. அதற்கு மொழி ஒரு தடையாக இருக்கவில்லை.

இதையே அடிப்படையாக வைத்து, தாங்களும் அதேபோல், பேய் வேடமிட்டு பிராங் வீடியோக்களை எடுப்பது என அந்த இளைஞர்கள் முடிவு செய்தனர். அதன் மூலம் யூ டியூப் சேனலை பிரபலப்படுத்தலாம் என திட்டமிட்டனர். இதற்காக பெங்களூரு யஷ்வந்தபுரம் அருகே உள்ள ஷெரீப் நகர் பகுதிக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்ற அவர்கள், நள்ளிரவு நேரத்தில் பேய் வேடமிட்டு, ரத்தக்கறையுடன் சென்று பொதுமக்களை மிரட்டத் தொடங்கினர்.

3 இளைஞர்கள் பொதுமக்களை மிரட்டிய நிலையில், அவர்களது நண்பர்கள், பல்வேறு இடங்களில் மறைந்து இருந்து, நடப்பவற்றை வீடியோ பதிவு செய்து கொண்டிருந்தனர். இருசக்கர வாகனம், ஆட்டோ, கார் என அந்த பகுதியில் சென்ற வாகனங்கள் முன்னாள் திடீரென ஓடிப்போய் நின்று பயமுறுத்தத் தொடங்கினர். இளைஞர்கள் தான் இவ்வாறு செய்கிறார்கள் என்ற உண்மையை அறியாத அவ்வழியாக வந்தவர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

இதைப்பார்த்து உற்சாகம் அடைந்த இளைஞர்கள், கொஞ்சம் ஓவராத்தான் போய் பார்ப்போமே என்ற நினைப்பில், சாலை ஓரம் படுத்திருந்தவர்களையும் மிரட்டியதோடு, அவர்களின் காதையும் கடித்து பதம் பார்த்துள்ளனர். ஒரு கட்டத்தில் இளைஞர்களின் குறும்புத்தனத்தை அறிந்து கொண்ட பொதுமக்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அப்போதும் அடங்காத பேய் வேடமிட்ட இளைஞர், அங்கு வந்த போலீசாரையும் விரட்டத் தொடங்கினார்.

ஆனால் உஷாரான போலீசார், திரும்பி அந்த இளைஞரை துரத்த ஆரம்பித்தார். சிறிது தூரம் ஓடிய இளைஞரை போலீசார் பிடித்தனர். அந்த இளைஞருக்கு கும்மாங்குத்து கொடுத்து, போலீசார் கைவரிசை காட்டியதை பார்த்த மற்ற இளைஞர்கள், அலறியடித்து ஓடிவந்து யூ டியூப் சேனலுக்காக பிராங் வீடியோ எடுப்பதை சொன்னதோடு, வீடியோ பதிவையும் போலீசாருக்கு போட்டு காட்டினர். இதுபோதாதா போலீசுக்கு..? இதையடுத்து அந்த 7 இளைஞர்களையும் காவல்நிலையம் அழைத்துச் சென்று போலீசார் விசாரித்தனர். விசாரணையில்அவர்கள் 7 பேரும்  கல்லூரி மாணவர்கள் என்பது தெரிய வந்ததை அடுத்து அவர்களை கைது செய்தனர்.

மக்களை அச்சுறுத்தும் வகையில் பிராங் வீடியோக்களை பதிவு செய்யக் கூடாது என்ற தடை இருப்பதை அறியாமல் இளைஞர்கள் செய்த காரியத்தால், தற்போது அவர்கள் கம்பி எண்ணுகின்றனர். யூ டியூப் சேனலை பிரபலப்படுத்துவதற்காக பிராங்க் வீடியோ எடுத்த அவர்கள், தற்போது அவர்களது பகுதியில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பிரபலம் ஆகிவிட்டார்கள். ஆனால், நெகட்டிவ் பிரபலம்தான் கிடைத்துள்ளது. சரி யூ டியூப் சேனலுக்காவது சப்ஸ்கிரைபர்கள் குவிந்தார்களா? என்றால் அதுவும் இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet