Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

கந்தசஷ்டி கவசம் பற்றி மீண்டும் அவதூறு… அசுரன் படத்தின் இயக்குநர் கைது…

0 Comments

Published on: Friday, July 31st, 2020 at 12:34 PM

கந்தசஷ்டி கவசம் பற்றி மீண்டும் அவதூறு… அசுரன் படத்தின் இயக்குநர் கைது…

கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறாக பேசியதாகவும், கறுப்பர் கூட்டத்திற்கு ஆதரவாக பேசியதாகவும் பிரபல இயக்குநரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கந்த சஷ்டி கவசத்தை இழிவு படுத்தி வீடியோ வெளியிட்டதாக கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலின் நிர்வாகிகள் சுரேந்தர் நடராஜன், செந்தில்வாசன் ஆகிய இருவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 15 நாட்களுக்கு முன் கைது செய்தனர். பின்னர் இவர்கள் இருவர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இந்த வழக்கில் ஓட்டேரியைச் சேர்ந்த சோமசுந்தரம், மறைமலை நகரைச் சேர்ந்த குகன் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில், நாளை மனிதன், அதிசய மனிதன், அருண் பாண்டியன் நடித்த அசுரன், ஒரு இயக்குநரின் காதல் டைரி உள்பட பல சர்ச்சைக்குரிய படங்களை இயக்கிய வேலு பிரபாகரன், கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனல் நிர்வாகிகளுக்கு ஆதரவாகவும், கந்த சஷ்டி கவசத்தை அவதூறாக பேசியதாகவும் சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த சிவாஜி என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

இதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், திரைப்பட இயக்குனர் வேலு பிரபாகரன் மீது மத உணர்வை தூண்டி கலகம் ஏற்படுத்துதல், சாதி மத இன ரீதியாக பேசி பிரச்சனையை தூண்டி விடுதல், அசாதாரண சூழ்நிலையை உருவாக்குதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

சென்னை மத்திய குற்றப் பிரிவு அலுவலகத்தில் விசாரணை நடத்திய போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet