Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

மனைவியுடன் கள்ளக்காதல்… கண்மாய்க்கு அழைத்துச் சென்று கழுத்தை அறுத்த கணவர்…

0 Comments

Published on: Saturday, July 18th, 2020 at 10:47 PM

மனைவியுடன் கள்ளக்காதல்கண்மாய்க்கு அழைத்துச் சென்று கழுத்தை அறுத்த கணவர்

மனைவியுடனான கள்ளக்காதலனை கைவிட மறுத்த இளைஞரை, கத்தியால் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் அருப்புக் கோட்டையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகராட்சி அலுவலகம் பின்புறம்  உள்ள காளவாசல் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ் (26 வயது). இவருக்கு திருமணமாகி, 2 குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை காலை வெளியில் சென்றவர் வீடு திரும்பவில்லை.

இந்நிலையில், அருப்புக்கோட்டை  பெரிய கண்மாய் பகுதியில் இளைஞர் ஒருவரின் சடலம் கிடப்பதாக பொதுமக்கள் நகர காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அங்கு சென்று உடலைக் கைப்பற்றிய போலீசார், பின்னர் மேற்கொண்ட விசாரணையில் அது விக்னேஷ் என்பதை அறிந்தனர். உடலில் கத்திக்குத்து காயங்கள் இருந்ததால், கொலை வழக்கு பதிவு செய்து, உறவினர்கள், நண்பர்களிடம் விசாரித்தனர்.

அப்போது, வியாழக்கிழமை காலை விக்னேஷின் தம்பி உடன் படித்த சுரேஷ் என்பவர், விக்னேஷை அழைத்துச் சென்றதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இதை அடுத்து சுரேஷை பிடித்து போலீசார் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

பக்கத்து தெருவில் உள்ள சுரேஷ், விக்னேஷின் தம்பியை பார்க்க அவரது வீட்டுக்குச் செல்லும்போது விக்னேசும் அறிமுகமாகியுள்ளார். பின்னர் இருவரும் நெருங்கிய நண்பர்களாக மாறியதால், ஒன்றாக ஊர் சுற்றுவது, மது அருந்துவது என இருந்துள்ளனர். சுரேஷ் வீட்டுக்கு விக்னேஷ் சென்றுவரும்போது, அவரது மனைவி உடன் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியுள்ளது.

இந்த விவகாரம் சுரேஷிற்கு தெரிந்து மனைவியையும் விக்னேஷையும் கண்டித்துள்ளார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பண கஷ்டத்தில் இருந்த சுரேஷ், விக்னேசின் இருசக்கர வாகன ஆர்.சி. புக்கை வாங்கி அடகு வைத்துள்ளார். அதை மீட்டுத்தருவதாகக்கூறி, வியாழக்கிழமை காலை விக்னேஷை அழைத்துச் சென்றுள்ளார் சுரேஷ்.

பெரிய கண்மாய் பகுதிக்கு விக்னேஷை அழைத்துச் சென்ற சுரேஷ், தனது மனைவி உடனான கள்ளத்தொடர்பை கைவிடுமாறு கூறியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி, அடிதடியாக மாறியுள்ளது. ஆனால், ஏற்கெனவே விக்னேஷை தீர்த்துக்கட்ட முடிவு செய்திருந்த சுரேஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் விக்னேஷின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.

இதை அடுத்து சுரேஷை கைது செய்த போலீசார், இந்த விவகாரத்தில் சுரேஷின் மனைவிக்கும் தொடர்பு இருக்கிறதா என விசாரித்து வருகின்றனர்.

நண்பரின் மனைவி உடன் கள்ளத்தொடர்பில் இருந்த இளைஞர், நண்பராலேயே கொலை செய்யப்பட்ட சம்பவம் அருப்புக்கோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet