Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி – திட்டவட்டமாக கூறிய சென்னை பல்கலை..!

0 Comments

Published on: Wednesday, September 9th, 2020 at 8:58 AM

அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி – திட்டவட்டமாக கூறிய சென்னை பல்கலை..!

அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கும் விவகாரத்தில் அரசின் முடிவே இறுதியானது என்று சென்னை பல்கலைக்கழகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

கொரோனா காரணமாக பள்ளி, கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான தேர்வை ரத்து செய்த தமிழக அரசு, தேர்வுக்கட்டணம் செலுத்திய அரியர் மாணவர்கள் உள்பட அனைவரும் தேர்ச்சி பெறுவதாக அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஏஐசிடிஇ, அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்க முடியாது என்றும், அவ்வாறு வழங்கினால் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்றும் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு எச்சரிக்கை விடுத்தது.

இந்த நிலையில், அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கும் விவகாரத்தில் அரசின் முடிவே இறுதியானது என்றும், அரியர் தேர்வு தொடர்பாக பல்கலைக்கழக மானியக்குழு உள்ளிட்ட இதர அமைப்புகளிடம் இருந்து எந்த அறிவிப்பும் வரவில்லை என்றும் சென்னை பல்கலைக்கழக துணை வேந்தர் கவுரி தெரிவித்தார்.

பல்கலைக்கழகம் மற்றும் உறுப்பு கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வு மாணவர்களுக்கு ஆன்லைனில் நடத்தப்படும் என்றும் அவர் கூறினார். சென்னை பல்கலைக்கழக மாணவர்களுக்கு பன்னாட்டு நிறுவனங்களில் வேலைவாய்ப்பை பெற்றுத்தர உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet