Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

டிக்டாக் காதலனுடன் காணாமல் போன 16 வயது சிறுமி… செல்போன் மூலம் சிக்கிய இளைஞர்…

0 Comments

Published on: Friday, August 14th, 2020 at 9:42 AM

டிக்டாக் காதலனுடன் காணாமல் போன 16 வயது சிறுமி… செல்போன் மூலம் சிக்கிய இளைஞர்…

டிக்டாக் செயலி தடை செய்யப்பட்டதால், அதன் மூலம் அறிமுகமான இளைஞருடன் பழக முடியாமல் தவித்த 16 வயது சிறுமி திசைமாறிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறையில் 10ஆம் வகுப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்த 16 வயது சிறுமி டிக்டாக் செயலியில் வீடியோக்கள் வெளியிடுவதை வாடிக்கையாக வைத்திருந்தார். டிக்டாக் குறித்து சிறுமியின் பெற்றோருக்கு பெரிய அளவில் விவரம் தெரியாததால் அவர்கள் கண்டுகொள்ளவில்லை. திடீரென டிக்டாக் செயலி தடை செய்யப்பட்டதால் மனமுடைந்து காணப்பட்ட சிறுமி கடந்த 6ஆம் தேதி காணாமல் போனார்.

அக்கம்பக்கம், உறவினர்கள், தோழிகள் வீட்டில் தேடியும் சிறுமி கிடைக்கவில்லை. இதனால் மகளை காணவில்லை என அச்சிறுமியின் பெற்றோர் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். வழக்கு பதிவு செய்த போலீசார், சிறுமியின் மொபைல் போனை வைத்து தேடியபோது அரக்கோணத்தில் இருப்பது தெரிய வந்தது. அங்கு சென்ற மயிலாடுதுறை போலீசார் சிறுமியை மீட்டு அழைத்து வந்தனர். சிறுமியிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் கிடைத்தது.

டிக்டாக் செயலி மூலம் அரக்கோணம் பரமேஸ்வரமங்கலத்தைச் சேர்ந்த சஞ்சய்குமார் என்ற இளைஞருடன் சிறுமிக்கு நட்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் சேர்ந்து டிக்டாக்கில் ஏராளமான வீடியோக்களை வெளியிட்டு பொழுதை கழித்து வந்தனர். 6 மாத காலமாக அந்த சிறுமி டிக்டாக்கில் சஞ்சய்குமாருடன் பழகி வந்த நிலையில், டிக்டாக் நட்பு காதலாக மாறியுள்ளது.

திடீரென டிக்டாக் செயலி தடை செய்யப்பட்டதால் இருவருக்கும் இடையிலான உறவு துண்டிக்கப்பட்டதுபோல் உணர்ந்துள்ளனர். போன் மூலம் பேசியும், வாட்ஸ்ஆப் சாட் மூலமும் சஞ்சய்குமாருடன் பழகி வந்துள்ளார். எனினும் டிக்டாக் போல் அது இல்லாததால், இருவரும் நேரில் சந்திக்க முடிவு செய்துள்ளனர். இதற்காக தனது நண்பர் ஒருவருடன் மயிலாடுதுறை சென்ற சஞ்சய்குமார், சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி அரக்கோணத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

சிறுமியை பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசார் சஞ்சய்குமார் மற்றும் அவரது நண்பர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். புதன்கிழமை சஞ்சய்குமாரை கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சிறுமியை கடத்த அவருக்கு உதவிய நண்பரை தேடி வருகின்றனர்.

டிக்டாக் செயல்பாட்டில் இருந்தபோது பலரது குடும்பத்தில் பிரச்சனையை ஏற்படுத்திய நிலையில், தடைக்குப் பிறகும் அது உருவாக்கிய எதிர்மறை தாக்கம் தொடர்ந்து வருகிறது என்பதற்கு உதாரணமாக உள்ளது இந்த சம்பவம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet