0 Comments
Published on: Saturday, June 6th, 2020 at 10:48 PM
ஆஸ்திரேலியாவில் பறையிசைக்கு குத்தாட்டம் போட்ட பெண்… உற்சாகமடைந்த மக்கள்!
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நம்ம ஊர் பறையிசைக்கு பெண் ஒருவர் குத்தாட்டம் போட்டதை பார்த்து, பொதுமக்கள் உற்சாகத்தில் தாங்களும் சேர்ந்து ஆடினர்.
அமெரிக்காவில் கருப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்டு கொல்லப்பட்டதை கண்டித்து, அங்குள்ள மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம் உலமெங்கும் பரவி, ஆஸ்திரேலியாவிலும் நடைபெற்று வருகிறது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தொடங்கிய இந்த போராட்டம், நம்ம ஊர் ஜல்லிக்கட்டுப் போராட்டம் போல வீறு கொண்டுள்ளது. அத்துடன் ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது, சோர்வை போக்குவதற்கு என்னென்ன கலைநிகழ்ச்சிகளை நாம் நடத்தினோமோ, அதேபோன்று ஆஸ்திரேலியர்களும் பல நிகழ்ச்சிகளை நடத்தி, போராட்டக் களத்தில் சோர்வடையாமல் காத்துக் கொள்கின்றனர்.
அவ்வாறு ஓரிடத்தில் நடந்த போராட்டத்தின்போது, நம்ம ஊர் பறையிசையை ஒருவர் வாசிக்க, கருப்பின பெண் ஒருவர் குத்தாட்டம் போடத் தொடங்கினார். நேரம் செல்லச் செல்ல அந்த உற்சாகம் மற்றவர்களையும் பற்றிக் கொள்ள, அனைவரும் ஆடத் தொடங்கினர். அந்த வீடியோவை கீழே பாருங்கள்….
No comments yet