Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

பொன்மகள் வந்தாள் வெளியீட்டு தேதி அறிவிப்பு – கொதிக்கும் தியேட்டர் உரிமையாளர்கள்…

1 Comments

Published on: Saturday, May 16th, 2020 at 5:57 PM

பொன்மகள் வந்தாள் வெளியீட்டு தேதி அறிவிப்பு – கொதிக்கும் தியேட்டர் உரிமையாளர்கள்…

ஜோதிகா நடித்துள்ள பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள பென்குயின் என இந்தியளவில் பல முன்னணி படங்களை நேரடியாக ஓடிடி-யில் வெளியிடபோவதாக அமேசான் பிரைம் நிறுவனம் அறிவித்துள்ளது.

தமிழ் திரைத்துறையில் கடந்த சில நாட்களாக கொரோனாவுக்கு இணையாக ஒலிக்கப்பட்ட ஒரு பெயர் ஓடிடி. நேரடியாக ஒரு படத்தை இணையத்தில் வெளியிடுவதுதான் இந்த ஓடிடி முறை. சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடித்துள்ள பொன்மகள் வந்தாள் திரைப்படம் அமேசான் பிரைமில் நேரடியாக வெளிவரும் என தகவல் வெளியானதும் அதற்கு திரையரங்க உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மீறினால் இனி சூர்யா, ஜோதிகா நடிக்கும் படங்களை திரையரங்குகளில் திரையிட மாட்டோம் என்றும் கூறினர். அதேசமயம் தயாரிப்பாளர்கள் சார்பில் இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்த நிலையில் பொன்மகள் வந்தாள் திரைப்படம் மே 29ஆம் தேதியும், கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள பென்குயின் திரைப்படம் ஜூன் 19ஆம் தேதியும் நேரடியாக தங்களுடைய தளத்தில் வெளியிட போவதாக அமேசான் பிரைம் நிறுவனம் அறிவித்திருக்கிறது. இதுபோக இந்தியில் வித்யாபாலன் நடித்துள்ள சகுந்தலா தேவி, மலையாளத்தில் ஜெயசூர்யா, அதிதிராவ் ஹைதாரி நடித்துள்ள சூஃபியும் சுஜாதாயும் என இந்தியளவில் அரை டஜனுக்கும் மேற்பட்ட படங்களை எந்தெந்த தேதிகளில் வெளியிட போகிறோம் என்ற தகவலையும் அமேசான் வெளியிட்டுள்ளது.

சிறு பட்ஜெட் படங்கள் மட்டுமல்லாமல் பாலிவுட்டின் ரூ.100 கோடி வசூல் நாயகனாக திகழும் ஆயுஷ்மான் குர்ரன்னா, அமிதாப் பச்சனுடன் இணைந்து நடித்துள்ள குலாபோ சிட்டாபோ போன்ற படங்களும் இந்த பட்டியலில் இருப்பதால் இந்தியளவில் இது மாபெரும் புரட்சியாக பார்க்கப்படுகிறது.

ஆனால் தமிழ் சினிமாவை பொறுத்தவரை சிறு பட்ஜெட் படங்கள் மட்டுமே தற்போது வரை ஓடிடி-க்கு ஆதரவளித்து வருகின்றனர். விஜய்யின் மாஸ்டர், தனுஷின் ஜகமே தந்திரம் போன்ற பெரிய படங்கள் திரையரங்குகளில் ரசிகர்களின் கொண்டாட்டத்துக்கு இடையே வெளியிடவே ஆர்வம் காட்டுகின்றனர்.

சிறு பட்ஜெட் படங்களுக்கு ஓடிடி நிறுவனங்கள் மாற்று வழி என சிலர் பாராட்டினாலும் திரையரங்குகளில் சிறு பட்ஜெட் படங்களுக்கு பாரபட்சம் பார்ப்பது போல ஓடிடி நிறுவனங்களும் குறிப்பிட்ட ஸ்டார் நடிகர்களின் படங்களை மட்டுமே பெற்றுகொள்வதாகவும் இந்த நிலை மாறினால் உண்மையிலேயே ஓடிடி நிறுவனங்கள் சிறு பட்ஜெட் படங்களுக்கு பெரும் வரமாக இருக்கும் என்பதும் திரை வல்லுனர்களின் கருத்தாக உள்ளது.

ஆனால், தொழில்நுட்ப வளர்ச்சியில் இந்த மாற்றங்களை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும் என்றே பல தரப்பினரும் கருத்து தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1COMMENTS