Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

கிரிக்கெட் போட்டிகள் அனைத்திலும் மேட்ச் பிக்சிங் – அதிரவைத்த சூதாட்ட தரகர்..!

0 Comments

Published on: Sunday, May 31st, 2020 at 6:41 PM

கிரிக்கெட் போட்டிகள் அனைத்திலும் மேட்ச் பிக்சிங் – அதிரவைத்த சூதாட்ட தரகர்..!

கிரிக்கெட் போட்டிகள் அனைத்திலும் மேட்ச் பிக்சிங் நடத்தப்பதாக சூதாட்டத் தரகர் சஞ்ஜீவ் சாவ்லா கூறியிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

கிரிக்கெட் மேட்ச் பிக்சிங் விவகாரத்தில் உலக அளவில் பல வீரர்கள் எதிர்காலத்தை இழந்த நிலையில், இந்தியாவிலும் அஜய் ஜடேஜா, மனோஜ் பிரபாகர், அஜய் சர்மா, ஸ்ரீசாந்த் உள்ளிட்டோரும் சிக்கி சீரழிந்தனர்ஆனாலும், கிரிக்கெட் சூதாட்டம் ஓயவில்லை.

கடந்த 2000ஆவது ஆண்டில் நடந்த கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சூதாட்ட தரகர் சஞ்ஜீவ் சாவ்லா, தற்போது டெல்லி போலீசிடம் புதிய தகவல்களை தெரிவித்துள்ளார். திரைப்படத்தை ஒருவர் இயக்குவது போல கிரிக்கெட் போட்டிகளையும் நிழல் உலக தாதாக்கள் இயக்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.

சூதாட்டத்தில் பல வீரர்களுக்கு தொடர்பு இருப்பதாக கூறியுள்ள சாவ்லா, அனைத்து போட்டிகளிலும் மேட்ச் பிக்சிங் நடப்பதாகவும் அவர் தெரிவித்துள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet