Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

அமிதாப், அபிஷேக்கை தொடர்ந்து ஐஸ்வர்யா ராய்க்கும் கொரோனா… ஆரத்யாவுக்கும் உறுதி…

0 Comments

Published on: Sunday, July 12th, 2020 at 3:50 PM

அமிதாப், அபிஷேக்கை தொடர்ந்து ஐஸ்வர்யா ராய்க்கும் கொரோனா… ஆரத்யாவுக்கும் உறுதி…

அமிதாப் பச்சம், அபிஷேக் உள்ளிட்ட இந்தி நடிகர்களுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

இந்தி திரைப்பட உலகின் சூப்பர் ஸ்டாரான 77 வயதான அமிதாப் பச்சனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா பாதிப்பு உறுதியானது. இதையடுத்து, இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த தகவலை அபிதாப் பச்சனே தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்ததோடு, தன்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் கொரோனா சோதனை செய்து கொள்ள அறிவுறுத்தினார்.

இதையடுத்து, அமிதாப் பச்சனின் மருமகளான நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆரத்யா ஆகியோருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டது. அதில் இருவருக்குமே கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து, அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதனிடையே,  இந்தி நடிகர் அனுபம் கெரின் தாய், சகோதரர், சகோதரரின் மனைவிக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தி திரைப்பட நடிகர், நடிகைகள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட தமிழ்த் திரையுலக நட்சத்திரங்கள் பலர், அமிதாப், ஐஸ்வர்யா ராய் ஆகியோரிடம் தொலைபேசி மூலம் உடல் நலம் விசாரித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet